விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள்/2010

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Scaled - ஓப்பன் ஆபீஸ் மென்பொருளிலும் மற்றும் பல மென்பொருட்களிலும் பயன்படும் சொல் இது. இதற்கு சரியான தமிழ் மொழிபெயர்பை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். --Mugunth 12:41, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

movie - மென்பொருட்களில் இந்த சொல்லை திரைப்படம் என்று மொழிபெயர்த்துவருகின்றனர். இது சரியான சொல்லாகத் தெரியவில்லை. இதற்குத் சரியான தமிழ் சொல்லைத் தெரியப்படுத்துமாறு கேட்டுகொள்கிறேன். --Mugunth 12:47, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

பொதுவாக scaled drawing என்றால் முதற்பொருளின் நீள-அகலங்களுக்கு ஏற்ற விகிதத்தில் மாற்றி அமைக்கப்பட்ட (சுருக்கியோ, விரித்தோ) தோற்றுருவான படம் என்று பொருள். முதற்பொருளோடு ஒப்புடைய (நேர் தொடர்புடைய) அகல்தல் (பொதுவாக விரிதல், ஆனால் மாறுபடுதல் என்று இங்கு பொருள்) உடையதால் ஒப்பகற்சி (ஒப்பு + அகல்தல் ==> ஒப்பு அகற்சி = ஒப்பகற்சி) என்பதை scaled என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தலாம். ஒத்தகற்சி என்றும் கூறலாம். தமிழில் ஒப்புரு என்றாலே scaled model தான், ஆனால் பொதுவாக மாடல் என்பதற்கும் ஒப்புரு என்றே சொல்கிறோம். இசுக்கேல்டு மாடல் என்பதற்குத் தனியான சொல் வேண்டும் என்றால் விகித ஒப்புரு, விகித ஒத்துரு, ஒப்பகலுரு (ஒப்பு அகல் உரு)) அல்லது ஒப்பு ஏல் (ஏற்ற) உரு--> ஒப்பேலுரு. ஒத்த ஏல் உரு, ஒத்தேலுரு. முகுந்த், சரியான வரையறையும், இருண்டு எடுத்துக்காட்டு சொற்றொடர்களும் தந்தால், மீண்டும் முயன்று பார்க்கலாம். --செல்வா 13:24, 17 ஆகஸ்ட் 2010 (UTC)