உள்ளடக்கத்துக்குச் செல்

ಕಾಗೆ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கன்னடம்[தொகு]

ಕಾಗೆ:
கா1கெ3--காகம்


பொருள்[தொகு]

  • ಕಾಗೆ, பெயர்ச்சொல்.
  1. காகம்
  2. காக்கை

விளக்கம்[தொகு]

  • கறுப்பு நிறத்தில் கா கா என்றுக் கரைந்து கொண்டு, தென்னமெரிக்காவைத் தவிர உலகெங்கும் காணப்படும் ஒரு பறவையினம்...தரையில் கிடக்கும் எல்லா அசுத்தங்களையும் தின்றுவிடுமாதலால் ஆகாயத்தோட்டி என்ற செல்லப்பெயருமுண்டு...இந்து மதத்தில் சனி பகவானின் வாகனம் எனவும், மூதாதையர் காக்கையின் வடிவில் வருவர் என்னும் நம்பிக்கையும் உண்டு...காக்கைக்கு அன்னமிட்ட பின்னரே உணவருந்தும் இந்து குடும்பங்கள் அநேகமுள்ளன...மூதாதையர் இறந்த நாளன்று ஆண்டுக்கொருமுறை நடத்தும் அவர்களுக்கு உணவளிக்கும் திவசம் என்னும் நாளில் படைக்கப்படும் பிண்டம் என்ற சோற்று உருண்டையை காகத்திற்கு காகா எனக்கூவி அளிக்கும்போது, காக்கை உடனே வந்து தின்றால், இறந்தவரே நேரில் வந்து உணவு உண்டதாக மகிழ்வர்...வீட்டின் முன் தொடர்ந்து காகம் கரைந்து கொண்டிருந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கையும் இந்துக்களுக்கு உண்டு..காகம் தன்னந்தனியே தீனி சாப்பிடாது...மற்ற காகங்களை கரைந்து அழைத்து அவற்றுடன்தான் தானும் புசிக்கும்....இன ஒற்றுமைக்கும், இனத்தாரோடு கூடி வாழ்தலுக்கும் ஓர் உன்னதமான எடுத்துக்காட்டு இந்த பறவையினம்...

( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಕಾಗೆ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಕಾಗೆ&oldid=1914301" இலிருந்து மீள்விக்கப்பட்டது