മണിത്തക്കാളി

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளம்[தொகு]

മണിത്തക്കാളി:
மணத்தக்காளி கீரை
മണിത്തക്കാളി:
மணத்தக்காளி காய்கள்--கறுப்பினம்

பொருள்[தொகு]

  • മണിത്തക്കാളി, பெயர்ச்சொல்.

(Solanum nigrum...(தாவரவியல் பெயர்))

  1. மணத்தக்காளி

விளக்கம்[தொகு]

  • மணத்தக்காளி மருத்துவ குணமுள்ள கீரைவகை...இதில் கறுப்பு, சிவப்பு என்ற இரு இனங்கள் உண்டு...கீரையைமட்டுமல்லாமல், மணத்தாக்காளிக் காய்களையும், காய்களை வற்றலாக்கியும் பயன்படுத்துவர்...இரண்டு நிற வேறுபாட்டால் தனித்தனியே சிற்சில வேறுபட்ட குணங்கள் உள்ளதானாலும் பொதுவாக காய்க்கு சிலேஷ்மரோகமும், இலைக்கு நாப்புண்ணும் வேக்காடும் போகும்...வற்றல் நோயாளிகளுக்கு உகந்தது...
  • உணவாக மணத்தக்காளிக் கீரையை துவரம்பருப்பு/பாசிப்பருப்புடன் கூட்டிப் பாகப்படி கடைந்து சாப்பிட்டால், உட்கூடு, வாய்ரணம், ஆசனக்கடுப்பு, நீர்ப்பைக் கொதிப்பு, தாகம், ஆகியவை போகும்...இதன் இலையை அரைத்து ஆசனத்தில் வைத்துக்கட்ட தினவு, புண் நீங்கும்...இதன் இலைச்சாற்றில் வேளைக்கு 3/4 > 1 அவுன்சு வீதம் தினமும் 3 வேளைக் கொடுத்துவர நீர் தாராளமாக இறங்கும்...இந்தக் கிரியையினால் பாண்டு, மகோதரம் குணமாகும்...இதன் உலர்ந்த இலைகளைக் கியாழமிட்டு பெண்கள் குறியை அலம்பிவர வெட்டைச் சூட்டால் படும் வெள்ளை என்னும் பிணி நீங்கும்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---മണിത്തക്കാളി--- indowordnet + HermannGundert + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=മണിത്തക്കാളി&oldid=1286306" இருந்து மீள்விக்கப்பட்டது