Kashmir

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Kashmir:
காஷ்மீர் மாநிலத்தின் முழுப்பரப்பளவு...நாடுகளின் ஆட்சிவிளக்கம் தரப்பட்டிருக்கிறது..

பொருள்[தொகு]

  • Kashmir, பெயர்ச்சொல்.
  1. ஓர் இந்திய மாநிலம்

விளக்கம்[தொகு]

  1. இந்தியப்பேரரசின் மாநிலங்களில் ஒன்றாகிய காஷ்மீர் இந்தியாவின் வடகோடியிலுள்ளது...ஆங் கிலேயர்களின் வருகைக்குமுன், ஒரு முடியாட்சியின் கீழ் இருந்து, பிறகு பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்பு/கண்காணிப்பு மற்றும் பொறுப்பின்கீழ் வந்தது...ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் தந்தபோது, பல்வேறு அரசியல் பரிணாமங்களுக்கிடையே, இந்தியாவின் ஒரு மாநிலமாயிற்று...பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகள் உரிமைக் கொண்டாடும் நிலப்பகுதிகள் இம்மாநிலத்திலிருக்கின்றன..இவ்விருநாடுகளும் ஆக்கிரமித்து, அவர்களின் ஆட்சியிலேயே தொடர்ந்து நீடிக்கும், நிலப்பகுதிகள் இன்றுமுள்ளன...இம்மாநிலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் என்னும் மூன்றுப் பாகங்களைக்கொண்டவை...காஷ்மீர் பள்ளத்தாக்கில் முசுலீம்களும், ஜம்முவில் இந்துக்களும் மற்றும் லடாக்கில் பௌத்தர்களும் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர்...
  2. இம்மாநிலம் அரசியல் சாசனப்படி ஜம்மு மற்றும் காஷ்மீர் என்றே அழைக்கப்படுகிறது...முக்கிய மொழிகள் உருது மற்றும் காஷ்மீரி...ஆட்சிமொழி உருது...இந்த இரு மொழிகளும் இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகத் திகழ்கின்றன...மாநிலத்தின் பரப்பளவு 222,236 சதுரக் கிலோமீட்டர்-மக்கட்தொகை 12,548,926...கோடைக்காலத் தலைநகர் ஸ்ரீநகர்...குளிர்க்காலத் தலைநகர் ஜம்மு...
  3. இந்திய அரசியலமைப்பின்படி சில விசேடமான, பிற இந்திய மாநிலங்களுக்கில்லாத அதிகாரங்களும், சலுகைகளும் கொண்ட மாநிலமாக விளங்குகிறது...கஷ்மீரின் முதன்மந்திரி பிரதம மந்திரி/பிரதமர் என்றே அழைக்கப்படுகிறார்...மேலும் இந்த மாநிலத்திற்குத் தனிக் கொடியுமுண்டு..
  • Kashmir (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---Kashmir--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Kashmir&oldid=1879482" இலிருந்து மீள்விக்கப்பட்டது