chinese okra

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

chinese okra:
பீர்க்கங்காய்
  1. cucumis acutangula..(தாவரவியல் பெயர்)
  2. chinese + okra

பொருள்[தொகு]

  • chinese okra, பெயர்ச்சொல்.
  1. பீர்க்கங்காய்
  2. common english name..ridge gourd

விளக்கம்[தொகு]

  1. உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று..இந்தியாவில் ridge gourdஎனவும் குறிப்பிடுவர்...இந்தக்காய்களின் மேற்றோலைச் சீவி வில்லைகளாக அரிந்துப் பொரியலாகவும், துவரம் பருப்பு/கடலைப்பருப்புச் சேர்த்துக் கூட்டமுதாகவும் செய்து அன்னத்துடன் கூட்டி உண்பர்...சீவப்பட்ட மேற்றோல் மிக இளசாக இருந்தால் அதை எண்ணெயில் வதக்கி, வறுத்த உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு ஆகியவற்றோடுச் சேர்த்து அரைத்துத் துவையலாகவும் சோற்றுடன் கூட்டி உண்பர்...இந்தக்காய்களின் முற்றிய நார் உடலை தேய்த்துக்குளிக்கும் பீர்க்கங்குடுவை-யாகப் பயனாகிறது...
  2. பீர்க்கங்காயை உண்டால் பித்தம், சீதளத்தை அளவுக்கு மிஞ்சி உண்டாக்கும்...உடலில் வாத கபங்களின் தத்துவ நிலைத் தவறும்...அதிகம் உண்ணாமலிருப்பதே உடல் நலத்திற்குச் சிறந்தது


( மொழிகள் )

சான்றுகோள் ---chinese okra--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=chinese_okra&oldid=1848332" இலிருந்து மீள்விக்கப்பட்டது