christianity
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]christianity
- கிறிஸ்தவம், கிறித்தவம்
- (பழைய வழக்கு) சத்திய வேதம்
விளக்கம்
[தொகு]கிறித்தவம் (கிறிஸ்தவம்) என்னும் சொல் கிரேக்க மூலத்திலிருந்து பிறந்தது. கிரேக்கத்தில் Xριστός (Khristos) (ஆங்.:"Christ") என்றால் திருப்பொழிவு (அருள்பொழிவு) பெற்றவர் (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்று பொருள்படும். நாசரேத்து இயேசு கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெற்று, இவ்வுலகில் கடவுளின் மகனாகப் பிறந்து, மனிதரைப் பாவத்திலிருந்து மீட்டு அவர்களுக்குப் பேரின்ப வாழ்வளித்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை, கிறித்தவத்தின் மையக் கொள்கை.
எடுத்துக்காட்டு
[தொகு]- ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார் (லூக்கா 4:18)திருவிவிலியம்
- அந்தியோக்கியாவில் தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள் (திருத்தூதர் பணிகள் 11:26) திருவிவிலியம்