சோளம் எனும் தானியம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உணவுப்பொருளாகவும், இதர தவரப்பகுதிகள் கால்நடைத் தீவனமாகவும் பெரிதும் உபயோகப்படுகிறது...இதில் வெள்ளை, சிவப்பு, இளங்கருப்பு என மூன்று இனங்கள் உள்ளன...தமிழ்நாட்டில் இந்தத் தானியத்தைக் குத்திப்புடைத்து, தவிடு நீக்கி, உப்பிட்டு சோறாக்கி சோளச்சோறு என்றும், வறுத்து சோளப்பொரி செய்தும் அல்லது மாவாக அரைத்து சோள உரொட்டிச் சுட்டும் உண்பர்...
பழமொழி...ஆனைப்பசிக்குச் சோளப்பொரி...யானைக்கு பசி எடுத்தால் சோளப்பொரியைக் கொடுத்து அதன் பசியை அடக்க முடியாது என்பது பொருள்...அதாவது தேவைக்கேற்ற அளவு இல்லாமல் மிகமிகக் குறைவு என்னும் அர்த்தத்தைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.