இந்த விலங்கு அணில் வகையைச் சேர்ந்த ஓர் இறைச்சி தின்னும் சிறிய உயிரினம்...ஆசிய மற்றும் ஆஃப்ரிக்க மண்ணைத் தாயகமாகக் கொண்டது...பொதுவாக நீளமான உடலையும், வாலையும் முதுகில் சாம்பல் நிறப் பட்டைகளையும் கொண்டிருக்கும்...படு வேகமும், தந்திர புத்தியும் உள்ள இந்த விலங்கு கொடிய நஞ்சு உடைய பாம்புகளையும் அனாயாசமாகக் கொன்றுத் தின்றுவிடும்...எலிகளும் இதன் இயற்கையான உணவாகும்...இந்த விலங்கினத்தில் பல கிளையினங்களும் உள்ளன...