உள்ளடக்கத்துக்குச் செல்

narcissism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

narcissism

  1. தற்காதல்; தந்நேசம் ; தன்வியப்பு; தன்னையே மிக நேசித்துப் பெருமைப்படல்
  2. தான்-முதல் நிலை  ; தன்னை முதல் நிறுத்தி எந்தச் செயலும் செய்யும் மன நிலை
விளக்கம்
  1. கிரேக்க நாட்டில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெயர் நார்கிசோஸ். அவன் ஒருநாள் குளத்துத் தண்ணீரில் தன் உருவத்தைக் கண்டான். அதன் அழகில் மயங்கி, தன் உருவத்தையே காதலித்தான். தொடர்ந்து பலகாலம் ரசிக்கத் தொடங்கினான். அவன் இறக்கும்வரை அக்காதல் நீடித்தது. இறந்தபின் அக்குளத்தில் ஒரு மலராகவே மாறிவிட்டான். அம்மலருக்கு அவனுடைய பெயர் சூட்டப்பட்டது. உலகில் யாரெல்லாம் தங்கள் அழகை, திறமையை தாங்களே போற்றிக் கொள்கிறார்களோ, அந்தப் பண்பு, அந்த இளைஞனின் பெயரால் "நார்சிசிசம்" (narcissism) என்று அழைக்கப்படுகிறது' என ஆக்ஸ்போஃடு அகராதி கூறுகிறது. தமிழில் அப்பண்பை, "தன்னை வியத்தல்' என்று குறிப்பிடலாம் . (தன்னை வியத்தல், தமிழ்மணி, 19 ஜூன் 2011)
( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=narcissism&oldid=1986974" இலிருந்து மீள்விக்கப்பட்டது