pivot
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
pivot
- மைய ஆதாரம்
- சுழலியக்க மையம்; சுழல் மையம்
- இயற்பியல். சுழற்சித் தானம்; சுழற்சித்தானம்; சுழற்சிப் புள்ளி, சுழல்தானம்
- சுழலிடம்
- தாங்கி; தாங்கு முனை
- சுழலல்; சுழலும்
- சுழல் தப்படி
விளக்கம்
[தொகு]கூடைப் பந்தாட்டத்தில் பந்துடன் முன்னேறிச் செல்லும் ஓர் ஆட்டக்காரரை எதிர்க்குழுவினர் முன்னே நின்று விதி பிறழாமல் தடுத்து நிறுத்துவது முறையான ஆட்டமாகும். அந்த இக்கட்டான நிலையில் அவர்களை ஏமாற்றிச் செல்வது தான் சிறப்பான ஆட்டமாகும் அப்படி ஏமாற்றி முன்னேறிச் செல்ல முடியாத நேரத்திலும் அல்லது பந்தை வளையத்திற்குள் எறிய இயலாத சமயத்திலும். தன்னுடைய குழுவினருக்கு சாதகமான முறையில் எறிந்து வழங்கவும் அல்லது பந்தைத் தட்டிக் கொண்டு மீண்டும் ஓடவும் கூடிய ஏற்ற நிலையில் கால்களை நிலைப்படுத்தி நின்று கொள்ளும் அசைவுக்கு சுழல்தப்படி என்று பெயர்.
அதாவது ஒரு கால் நிலையாக நிற்க, மற்றொரு காலை வசதியான நிலைமையில் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் விருப்பமான இடத்தில் மாற்றி வைக்கும் வகையில் நின்று கொள்வது தான் சுழல்தப்படி முறையாகும்
இதில் நிலையான கால் எது ? சுழல் கால் எது ?
பந்தைப் பிடிக்கும் பொழுது, ஒரு கால் மேலேயும் இன்னொரு கால் தரையிலும் இருந்தால், கடைசியாக எந்தக் கால் தரையில் படுகிறதோ, அது தான் நிலையான காலாகும். மற்றொன்று சுழலும் காலாகும்.
பந்தைப் பிடிக்கும் பொழுது, இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல் தரையை மிதித்தால், எந்தக்காலும் நிலையான கால் ஆகலாம்.
நிலையான காலை சிறிதேனும் நகர்த்தி விட்டால், அதற்கு இடம் மாறியது என்று தவறு குறிக்கப்படும்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் pivot