sapindus emarginatus
Appearance
ஆங்கிலம்
[தொகு]- sapindus + emarginatus
பொருள்
[தொகு]- sapindus emarginatus, பெயர்ச்சொல்.
- பூவந்தி
- சோப்புக்காய் மரம்
- பூவந்திக் கொட்டை மரம்
- அறைவாடிக்கிளி
- அக்கனக்காய்
விளக்கம்
[தொகு]- பேச்சு வழக்கில் பூந்திக் கொட்டை எனப்படும் இந்தமரத்துக் காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரையோடு, நறுமணத்தோடுக் கூடிய, திடமான நீர்மம் உண்டாகும்...இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும்...சிகைக்காயை/சீக்காயைப் போலவேப் பயன்படுகின்றன...
- இந்தக் காய்களின் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பில் 2-3 குன்றி எடை நசுக்கி, முலைப்பாலில் ஊறப்போட்டு, வடிகட்டி மூக்கின் வழியாக 2-3 துளி விட, மூக்கிலும் வாயிலும் கபத்தை வெளியாக்கும்...இதனால் மூர்ச்சை, பற்கிட்டல், காக்கைவலி முதலியவைகள் போகும்...
- தினமும் அணியக் கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்ற தங்க நகைகள், அதிகப் பயன்பாட்டால் மங்கிப்போகும்...அப்போது பூந்திக் கொட்டை கழுவிய நீரில் போட்டு, சற்றுக் கைவிரல்களால் அல்லது மெல்லிய புருசால் தேய்த்து எடுத்தால் புத்தம் புது நகைகளைப் போல் ஒளிரும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sapindus emarginatus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்