உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்

[தொகு]

பொருள்

[தொகு]

ஆய்தம்

  1. சார்பெழுத்துகளுள் ஒன்றானதும், நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து.

[1]

  1. மயிரையும் இருபிளப்பாகச் செய்யத் தகுந்தவாறு மிகு கூர்மையுடையதாகவும், பிடி சரிவர அமைந்ததாகவும் உள்ள அறுவை மருத்துவக் கருவி, நுண்ணிய சிறு கத்தி.
  2. துணைக்கருவி
  3. படை
  ஆயுத மனேகவித மானவை யெனப்பலவு மழகுற வியற்றியும் (பாரதவாரணா.57)
  • ம. ஆயுதம்;
  • க. ஆயுத;
  • தெ. ஆயுதமு.
  • சமற். ayudha./ ஆயுதம்

சொல் விளக்கம்

[தொகு]

1. [ஆய் → ஆய்தம்.] ஆய்தல் = நுணுகுதல்.

மொழி முதலாகாமையின் உயிரெழுத்தாகக் கொள்ளப்படாததும், உயிரேற இடந்தந்து உயிர் மெய்யெழுத்தாகக் கொள்ளப்படாததுமாகிய ஆய்த வெழுத்து ஒசையினிமை கருதி நுணுகி (அஃகி); ஒலித்தலின் ஆய்தம் எனப்பட்டது.


2. [ஆ → ஆய் → ஆய்தம்.] ஆய்தல் = நுனுகுதல், சிறுத்தல், கூர்மையாதல்; ஆய்தம் = நுணுகக் கூராக்கப்பட்ட கத்தி அல்லது படை(weapon).

வட மொழியிலுள்ள ஆயுதம் என்னும் சொல் (a-yudh); போருக்கு உதவும் படைக்கலம் என்னும் பொருளில் ஆளப்படுகிறது. எனினும் அது கூர்மையின் வழிப் பிறந்த தமிழ் 'ஆய்தம்' பெற்ற திரிவடிவே (ஆய்தம்→ ஆயுதம்); ஆகும். போரிடத் துணைபுரியும் குதிரை, யானை முதலிய உயிரிகளும் தேர், மெய்ம்மறை (கவசம்); போன்ற அஃறிணைப் பொருள்களும் ஆயுதம் (a-yudh); என வழங்கப் பெறாமையின், போருக்குத் துணைக் கருவி எனப் பொருள்படும் வடமொழி ஆயுதம் வடமொழிக்கு மூலச் சொல்லன்று என்பதும் தெளிவாகிறது. அதுவுமின்றி அத்திரம் (கைவிடுபடை);, சத்திரம் (கைவிடாப்படை); என்னும் இரு வகைக்கும் ஆயுதம் பொதுப்பெயராக இருத்தலும் காண்க.

ஆங்கிலம்

[தொகு]
  1. the letter ... so-called from the indistinctness of its sound, or form the peculiarity and minuteness of its form. It is chiefly a consonant but sometimes occurs as a vowel, yet it cannot be confounded with another letter (W)
  2. sharp surgical instrument, knife well-shaped, well-ground and fitted with a convenient handle. It should be so sharp as to be capable of cutting or splitting a hair.
  3. tool
  4. weapon.

சொல்வளம்

[தொகு]
  • பேனா ஒரு பேராயுதம் (pen is mightier than a sword; pen-wielding hands are as powerful as gun-wielding hands)
  1. குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்தம்&oldid=1988129" இலிருந்து மீள்விக்கப்பட்டது