படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

veerar

தமிழ்[தொகு]

படை:
இரும்புக்கலப்பை
படை:
படுக்கை
படை:
நித்திரை/தூக்கம்
படிமம்:Man with a ringworm infection on his back Welcome L0061931.jpg
படை:
மேகப்பற்று நோய்


ஒலிப்பு
(கோப்பு)

பொருள்[தொகு]

 • படை, பெயர்ச்சொல்.
 1. சேனை (பிங்.) --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
  (எ. கா.) படையியங் கரவம் (தொல். பொ. 58).
 2. போர்ப் படைகள் ---ஓர் அரசின் பாதுகாப்புக்குத்தேவையான ஆறுவகைப் படைகள்...மூலப்படை, கூலிப்படை,நாட்டுப்படை, காட்டுப்படை,துணைபடை,பகைப்படை..
 3. பரிவாரம்...ஒருவரின் உற்றார் உறவினர்களும், வேண்டியவர்களும்
  (எ. கா.) அவன் படைகளுக்கு யார் போட்டுமுடியும்?
 4. ஆய்தம் (பொது)
  (எ. கா.) தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள். 828).
 5. கருவி
 6. சாதனம்
  (எ. கா.) செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள். 555).
 7. இரத்தினத்திரயம்
  (எ. கா.) படை மூன்றும் (சீவக. 2813).
 8. முசுண்டி (பிங்.)
 9. கலப்பை (பிங்.) படை யுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு
  (எ. கா.) படை யுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு)
 10. குதிரைக்கலனை
  (எ. கா.) பசும்படை தரீஇ (பெரும்பாண்.) 492).
 11. யானைச்சூல்
  (எ. கா.) படைநவின்ற பல்களிறும் (பு. வெ. 9, 26).
 12. போர் (((சது.}})
 13. கல் முதலியவற்றின் அடுக்கு.
  (எ. கா.) படையமை யிட்டிகை (பெருங்.இலாவாண. 5, 41).
 14. செதிள் (W.)
 15. சமமாய்ப் பரப்புகை
  (எ. கா.) படையமைத் தியற்றிய மடையணிப் பள்ளியுள் (பெருங். உஞ்சைக். 43, 186-7).
 16. படுக்கை (பிங்.)
  (எ. கா.) படையகத்தோங்கிய பல் பூஞ் சேக்கை (பெருங். உஞ்சைக். 33, 107).
 17. நித்திரை (சூடாமணி நிகண்டு)
 18. மேகப்பற்று என்னும் சருமநோய்
 • படை, வினைச்சொல்.
 1. தோற்றுவி; உளதாக்கு
  (எ. கா.) வரலாற்று சாதனை படைத்தனர்(Created historic victory), இறைவன் உலகை படைத்தான்(God created world)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Ancient: forces | Modern: army/field army
 2. forces for the defence of akingdom, of six kinds, viz., mūla-p-paṭai, kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai, tuṇai-p-paṭai, pakai-p-paṭai--(பேச்சு வழக்கு)
 3. Ancient: weapons | Modern: Tamil short word for munition
 4. A sledge-like weapon, used in ancient war
 5. battle, contest, war, engagement
 6. instrument, implement, tool
 7. relations and attendants
 8. means, agency
 9. (Jaina.) Traid of excellent things. See இரத்தினத்திரயம்
 10. ploughshare
 11. saddle
 12. Covering and trappings of an elephant
 13. layer, stratum, as inbuilding a wall;flake
 14. scale
 15. Spreading evenly
 16. bed
 17. sleep
 18. ringworm

விளக்கம்[தொகு]


தற்காலத்தில்[தொகு]

ஆய்தவியல்[தொகு]

இராணுவம்[தொகு]

இங்கு இது army/field army என்னுஞ்ச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக வழங்கப்படுகிறது.

பயன்பாடு[தொகு]

பாக்கிஸ்தானியப் படைகள் இந்திய அரண்கள் மீது தாக்குதலை நடத்தின.

சொல்வளம்[தொகு]

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - படை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படை&oldid=1969953" இருந்து மீள்விக்கப்பட்டது