உள்ளடக்கத்துக்குச் செல்

உரிச்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

உரிச்சொல்

பொருள்

[தொகு]
  1. ஒரு பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, ஏதேனும் ஒரு வகையில் விளக்கம் கூட்டுவதாக அச்சொற்களுக்கு உற்ற தொடர்பை உடைய வேறொரு சொல் உரிச்சொல். தற்காலத்தில் இதனை பெயரடை (பெயர்ச்சொல்லின் பொருளை விரிவாக்கும் பெயர் உரிச்சொல்) என்றும், வினையடை (வினைச்சொல்லின் பொருளை விரிவாக்கும் வினை உரிச்சொல்) என்றும் அழைக்கப்பெறுகின்றன.
  2. தமிழில் உரிச்சொல் என்பது ஒரே பொருளைத் தரும் வேறொரு சொல்லால் சொல்லி அப் பொருளை வலுப்படுத்தும் சொற்களுக்கும் இப்பொருள் உண்டு. எடுத்துக்காட்டாக சால என்றாலும் மிகுதி என்றாலும் ஒரே பொருளே; என்றாலும் சால மிகுத்துப் பெயின் என்று திருக்குறளில் வரும் கூற்று, ஒருபொருள் குறித்த உரிச்சொல்லாகும். இதே போல பல ஒரே சொல் பல பொருளையும் உணர்த்தும் உரிச்சொல்லாக இருப்பதுண்டு. கடி என்னும் சொல் காரம் என்னும் சுவையையும், மிகுதி என்னும் அளவையும் குறிக்கும் (கடி என்பதற்கு இன்னும் 17 உக்கும் மேலான பொருள்கள் உண்டு); ஆகவே கடியுணவு என்றால் மிகுதியான உணவு என்று பொருள், கடிமிளகு என்றால் காராமான சுவையுடைய மிளகு என்று பொருள்[1]

விளக்கம்

[தொகு]
  • உரிய சொல் என்ற பொருளில் உரிச்சொல் எனப் பெயர் பெற்றது.
  • இலக்கணப் பயன்பாட்டுச் சொல்

( எடுத்துக்காட்டு )

[தொகு]
  • ஓடு(run) என்பதனை, வேகமாக ஓடு(run fastly) என்று சொல்லலாம். வேகமாக என்பது உரிச்சொல். வேகமான என்பது வினை உரிச்சொல் அல்லது வினையடை என்றும் கூறப்பெறும்.
  • நல்ல மாணவன், உயரமான பெண் முதலானவற்றில் நல்ல, உயரமான என்பன அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு மேலும் விளக்கம் தருமாறு (ஒரு குறிப்பிட்ட பண்பை அல்லது தன்மையை விரித்துக் கூறுமாறு) அமைந்துள்ளதால், நல்ல, உயரமான என்னும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும். இவை பெயரடை என்றும், பெயர் உரிச்சொல் என்றும் கூறப்பெறும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. டாக்டர் சொ. பரமசிவம், நற்றமிழ் இலக்கணம், 6 ஆம் பதிப்பு, 2000, பட்டு பதிப்பகம், சென்னை. பக். 353-4
"https://ta.wiktionary.org/w/index.php?title=உரிச்சொல்&oldid=1641481" இலிருந்து மீள்விக்கப்பட்டது