உள்ளடக்கத்துக்குச் செல்

திருமரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
திருமரம்:
-அரசமரம்
திருமரம்:
-அரசமரம்
திருமரம்:
-இலை--அரசயிலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • திருமரம், பெயர்ச்சொல்.
  1. அரசமரம் (சூடாமணி நிகண்டு)
  2. அரசுமரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. pipal tree

விளக்கம்

[தொகு]
  • பிரம்மாண்டமாக வளரக்கூடிய மரவகை...இந்துக்களின் இரண்டு புனித மரங்களில் ஒன்று...மற்றொன்று வேப்பமரம்...இந்து தெய்வீகத் தொடர்பான கோவில், குளம் போன்ற இடங்களில் இவ்விரு மரங்களையும் ஒரேயிடத்தில் பிணைந்துக் காணலாம்...தமிழக கிராமப்புறங்களில் ஆறு, ஏரி குளக்கரைகளில் பிள்ளையார் அரசமரத்தினடியில்தான் அமர்ந்திருப்பார்...புத்தபிரான் ஞானம் பெற்றதும் அரசமரத்தினடியில்தான்...அரசமரத்தினடியில் உட்கார்ந்து சாதாரணமாகப் பேசினால் உண்மைதான் வெளிவரும் என்னும் நம்பிக்கை சமூகத்திலுண்டு...பல இந்துமதப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் அரசமரம் பயன்படுகிறது...அரச மரத்தையும், வேப்ப மரத்தையும் பிரார்த்தித்துக்கொண்டு சுற்றி வருதல் இந்துமத வழக்கங்களில் ஒன்று...புத்த, சமணச் சமயத்தவருக்கும் அரசமரம் புனிதமானது.
  • மேற்கண்டப் பெருமைகளைத்தவிர இந்தமரம் பெரும் மருத்துவக் குணங்களையும் கொண்டது...அரசமரப்பட்டை சரும விரணத்தையும், விதை சுக்கிலக் கெடுதியையும், கொழுந்து தொண்டையை வறட்டுகின்ற நீர்வேட்கையையும் மற்றும் மகரந்தம் உடற்வெப்பம், முக்குற்றங்களையும் (வாதம், பித்தம், கபம் ஆகிய திரி தோஷங்கள்) போக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமரம்&oldid=1402821" இலிருந்து மீள்விக்கப்பட்டது