பேச்சு:ஆதாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • த*உழவனே, ஆதாரம், உசாத்துணை, சொல்வளம் ஆகியவற்றிற்கு விளக்கம் தந்தீர்கள். ஆதாரத்துக்குப் பதிலாக சான்று பயன்படுத்தலாம். ஆனால், சான்றைவிட ஆதாரம் மொழிவழக்கில் பரந்த பொருள் தருவதும் தெரிகிறது. அப்படியே இருப்பதில் தவறில்லை. இனிமேல் சொல் இடுகையில் சொல்வளம் பகுதியையும் கருத்தில் கொள்வேன்.
  • எடுத்துக்காட்டு என்பதற்குப் பயன்பாடு உள்ளது. விளக்கம் பகுதியில் சொற்பிறப்புப் பற்றிய தகவல்களைத் தரலாம். ஆக, வேறு இடர்ப்பாடுகள் இல்லை.
  • பழ.க, பல்பொருள் தரும் சொல் பற்றிப் பேசினீர்கள். ஓர் இடுகையை எடுத்துக்காட்டி விளக்குவீர்களா? நன்றி!--George46 02:25, 2 ஜூன் 2010 (UTC)

தங்கள் கருத்தறிந்தேன். பயன்பாடு என்பதனை வாக்கியப்பயன்பாடு என்று முன்பு இருந்தது போல மாற்றிக் கொள்ளலாமா? ஒரு சொல் வாக்கியத்தில் அமைந்திருக்கும் விதம். ஏனெனில் திரிபாக நிறைய சொற்கள் அமைவதை புரிந்து கொள்ள ஏதுவாகும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது.

எழுது என்பதன் திரிபு, எழுதி எனக்கொண்டால்..

(வாக்கியப்பயன்பாடு) ()

பயன்பாடு

(எ. கா.) நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

(எடுத்துக்காட்டு என்பதற்கு {{எ.கா}} என்ற வார்ப்புரு பயன்படுத்தலாம்.) (த*உழவன் 05:09, 2 ஜூன் 2010 (UTC))

  • ஆதாரம் என்பதைவிட சான்று அல்லது சான்றுகோள் எனலாம். அடிச்சான்று என்றும் கூறலாம். உசாத்துணை என்றும் கூறலாம். --செல்வா 12:15, 2 ஜூன் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆதாரம்&oldid=656621" இலிருந்து மீள்விக்கப்பட்டது