பேச்சு:பணிவிடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பழ. கந்தசாமி நீங்கள் மிக அழகாக பயன்பாடுகளைத் தொகுத்தும், அழகாக வடிவமைத்தும் வருகின்றீர்கள். நீங்களும் த.உழவனும் ஆற்றிவரும் விக்சனரி தொண்டுகள் அருமை! இங்கு விக்சனரிக்கு ஆற்றும் பணிவிடை என்பது பொருந்தாமையை நினைத்து நுணுக்கப்பொருள் வேறுபாடுதனை நினைக்கின்றேன். தொண்டு என்று வருமிடங்களில் எல்லாம் பணிவிடை செல்லாது என நினைக்கின்றேன். சில இடங்களில் செல்லும். --செல்வா 02:52, 9 மார்ச் 2010 (UTC)

  • செல்வா, நன்றி. தொண்டும் பணிவிடையும் எல்லா இடங்களில் பொருந்தாது என்பதை நான் யோசித்துப் பார்க்கவில்லை. உங்களைப் போன்றோரின் உதவியுடன் இவை போன்ற நுணுக்கமான வேறுபாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க விக்சனரி நிச்சயம் செம்மை பெறும். "தினமும்,..நாளும் என்னைக் கவனி'யுங்கள். பழ.கந்தசாமி 03:24, 9 மார்ச் 2010 (UTC)
நானும் நினைத்துப் பார்த்ததில்லை. தமிழ் விக்சனரி, சொல் எண்ணிக்கையில், உலக மொழிகளில் முதல் 10 இல் ஒன்றாக வர இயலும். முதலாவதாகவே வர இயலும். எண்ணிப்பாருங்கள் ஒரு 100 பேர் நாளொன்றுக்கு 10 சொற்கள் சேர்ப்பது ஒன்றும் அரிய செயல் இல்லை :) 100 பேரைச் சேர்ப்பது "கடினம்" ஆனால் உண்மையில் அது நம் கூட்டு அறியாமைதானே அன்றி, கடினம் அல்ல. ஓராண்டில் 200,000 முதல் 365,000 சொற்கள் வரை தொகுக்கலாம். 3-5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் சொற்கள் தொகுக்கலாம். விடாது உழைப்போம். விடாது ஆட்களைச் சேர்ப்போம் :) அரசு நினைத்தால், தக்க கண்காணியரை வைத்து வழிநடத்தினால் கட்டாய்ம் 1-2 மில்லியன் சொற்கள் தொகுக்க இயலும். மிகையல்ல. இடர் நாம் யாவரும் அறிவதுதான்.--செல்வா 03:40, 9 மார்ச் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பணிவிடை&oldid=633244" இலிருந்து மீள்விக்கப்பட்டது