பணிவிடை
Appearance
பணிவிடை(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒருவர், தன்னைவிட ஏதோ ஒரு வகையில் உயர்ந்த, மற்றொருவருக்கு உதவியாக இருக்குமாறு செய்யும் பணிகள் (வேலைகள்). பெற்றோர், பெரியோர், குரு முதலியவர்களுக்குப் பணிவுடனும் கனிவுடனும் தேவைப்படும் உதவிகள் செய்தல்
- ஒருவர் கோயில், தொண்டு, அற நிறுவனங்களில் இசைவுடன் செய்யும் பணிகள் (வேலைகள்).
- பணிவிடை செய் (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- service to parents, elders, needy - கைத்தொண்டு, சேவை, தொண்டு, சேவகம், குற்றேவல்
- temple service; temple construction - திருப்பணி
- work, business, occupation, office, work of an artist - தொழில்
- commission, order, command - கட்டளை
பயன்பாடு
- நீ சாகக் கிடந்தபோது அவர்கள் இருவரும் உனக்கு இரவு பகல் பணிவிடை செய்து உன்னைக் காப்பாற்றினார்கள் (அலை ஓசை, கல்கி) - When you were seriously ill, those two served you day and night and saved you
- என்னைத் தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; தங்களுக்குப் பணிவிடை புரியவும், தாங்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரவும் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும் (குருபீடம், ஜெயகாந்தன்)
- ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன் (விவிலியம்)
- பணிவிடை வானவர் புரிய (குற்றா. தல. மூர்த்தி. 10).
- பொருடனை . . . பணிவிடைக்குரித் தாக்கிய பெருமான் (உபதேச கா. சிறப்புப். 10).
- இறைவ விப்பணிவிடை தருக (பாரத. வேத். 32)