விடுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விளக்கம்[தொகு]

  • அனுமதியற்ற விடுப்பினை அலுவலகத்தில் எடுத்தால், அன்றைய நாளுக்கு ஊதியம் விடுபடும்(இல்லை).
  • தேவையற்ற ஒரு செய்தி (இப்படிப் பொருளிலும் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - leave
  • gossip (இலங்கை வழக்கின் பொருள்)

பயன்பாடு[தொகு]

  • நாளைக்கு நீ விடுப்பு எடுத்திடு, நாங்க ஊருக்குப் போகலாம்.
  • வீதியில நிண்டு விடுப்புப் பாக்காம உள்ள வாங்கோ. (இலங்கைப் பொருளில்)
  • அதுவும் வங்கி மேலாளர் என்று பொறுப்பு வரும்போது, விடுப்பு என்றே நினைக்க கூடாது என்று எழுதப்படாத சட்டம் என்று ஒன்று கொண்டு வந்து விடுவார்கள்

சொல்வளம்[தொகு]

விடு - விடுப்பு
விடுப்பு படிவம், விடுப்பு விண்ணப்பம்
விடுப்பளி, விடுப்பெடு, விடுப்பு வழங்கு
மகப்பேறு விடுப்பு, பேறுகால விடுப்பு,
தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=விடுப்பு&oldid=1958682" இலிருந்து மீள்விக்கப்பட்டது