உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இது பகுப்பில் பெயர்ச்சொல்லும், உள்ளே வினைச்சொல்லும் குறிப்பிட்டுள்ளது. கவனிக்க.--Inbamkumar86 20:05, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

  • இருவிதமாக, படங்களுடன் விரிவு படுத்தி விட்டேன்.தமிழ் ஆதாரங்களை ஒரே வரிசையாக மாற்றவேண்டும். --த*உழவன் 01:22, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

கண்டு என்பது வினையெச்சம். பொருள் விளங்க வேறொரு வினைமுற்று தேவைப்படும் ஒரு வினயெச்சம். கண்டு பிடிதான், கண்டு களித்தேன் என்று பிடித்தான், களித்தேன் போன்ற வினைமுற்றுகளால் பொருள் நிறைவு செய்ய வேண்டியிருக்கும் (முற்றுபெறாத) வினையெச்சம். ஆகவே வினை என்று கூறுவது சரியில்லை. --செல்வா 01:38, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

கற்கண்டு என்னும் பொருளும், கண்டங்கத்தரி என்னும் பொருளும் மிகவும் நன்ற்றாக அறிந்த்த பொருள்கள். இன்னும் வேறுசில பொருள்களும் உள்ளன. கிரியா அகராதியில் கண்டங்கத்தரி கூறாதது வியப்பானது! --செல்வா 02:06, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

  • உங்களின் சொற்விரிவு, எனக்குள் விரிதலை உண்டாக்கியது. நன்றி. கண்டங்கத்திரிக்கு ஆங்கிலத்தில் என்ன? படம் தேட வசதியாக இருக்கும்?--த*உழவன் 02:20, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
இதன் பூ மிகவும் அழகான சிறிதளவு செந்நிறம் கலந்த வெளிர்நீல நிறம் கொண்டது. இளம் வயலட் நிறம். இந்த்த நிறத்தைத் தமிழில் கத்தரிப்பூ நிறம் என்பர். செடியில் முள் இருக்கும்.அதிக உயரம் வளராத செடி (1 அடி??). இதன் அறிவியல் பெயர் solanum indicum என்று நினைக்கின்றேன். நாளை உறுதி செய்கின்றேன்.--செல்வா 04:14, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
கண்டங்கத்தரி (அ) கண்டங்கத்திரி என்பது Solanum melongena L. (Var. insanum L). )சான்றுகோள் சு.திருஞானம், மூலிகை மருத்துவம், செல்வி பதிப்பகம், திருச்சி, பக்கம் 33 இல் உள்ள குறிப்பு). சொலானேசியே குடும்பம் என்பது உறுதி, ஆனால் melongena என்னும் சிற்றினமா என்று இன்னும் உறுதி செய்ய வேண்டியிருக்கின்றது. ஆங்கில விக்கியில் இதனை (Solanum melongena) வெறும் கத்தரிக்காய் என்பது போல் எழுதியுள்ளார்கள் (இதல்ல கண்டங்கத்தரி என்பது). Solanum xanthocarpum என்பது பெரும்பாலும் சரியாக இருக்கும் என்பது என் நினைப்பு இப்பொழுது. என்றாலும் இன்னும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. பழம் மஞ்சள் நிறத்திலும், பூ கத்தரிப்பூ நீலத்திலும் இருக்கும். முள் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் Nightshade வகையான செடி என்பார்கள்.--செல்வா 14:19, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
செல்வா. தமிழ் மரபு அறக்கட்டளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.கண்டங்கத்திரி - Solanum indicum Linn. இந்த இணைப்பை பாருங்கள். --Inbamkumar86 14:29, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
இந்த அறிவியல் பெயரில் படங்களை தேடியபோது இது கிடைத்தது.இந்த தளத்தில் ஆங்கிலப் பெயர் poison berry என்று உள்ளதே. இது தான என்று கூகிள் படத் தேடலில் பார்த்தும் உறுதி செய்க.--Inbamkumar86 14:49, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

மிக்க நன்றி, இராச்குமார். சோலானம் இண்டிக்கம் என்றுதான் நானும் முதலில் மேலே குறித்துள்ளேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. பாயிசன் பெ'ர்ரி அல்ல (ஏன் என்றால் பழம் கருநீலமாக உள்ளது; மஞ்சளாக இருக்க வேண்டும்). இப்பக்கத்தில் கடைசியில் சோலானம் இண்டிக்கம் என்பதாக கொடுத்துள்ள படம் பொருந்தி உள்ளது. எனினும் சோலானாம் ஃகாந்த்தோகார்ப்பம் Solanum xanthocarpum என்பதும் ஒத்ததாக உள்ளது. மூலிகை நூலிலேயே தவறான வேறு பெயர் தந்திருக்கின்றார்கள் ((Solanum melongena என்று). ஆகவே மேலும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. நான் இச்செடியைப் பார்த்திருக்கின்றேன். ஒரு முறை இதன் கசா^யமும் குடித்தும் இருக்கின்றேன். நான் பார்த்த செடி, தரையோடு படர்ந்து இருந்தது, ஒரு அடி உயரம் பக்கமாக இருந்தது. பாருங்கள், பயன்பாட்டில் உள்ள அடிப்படை மருத்துவச் செடிகளிலேயே இவ்வளவு குழப்பம் !! :) என்னிடம் இன்னும் சில நூல்கள் உள்ளன,பார்த்து எழுதுறேன். உங்கள் ஆர்வத்துக்கும் பங்களிப்புக்கும் நன்றி--செல்வா 15:18, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

இங்கு கூறியிருப்பதும் நோக்கத்தக்கது--செல்வா 15:31, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

இப்பொழுது உறுதியாகிவிட்டது! முனைவர். கு.வி. கிருச்^ணமூர்த்தி என்னும் தாவரவியல் பேராசிரியர் எழுதியுள்ள தமிழரும் தாவரமும் என்னும் நூலில் (பாரதிதாசன் பல்கலைக் கழகம் வெளியீடு) பக்கம் 334 இல் கண்டங்கத்திரிக்கு Solanum surattense Burm (எழுத்துக்கூட்டல் Solanum surettense Burm என்ரும் கொடுக்கப்படுகின்றது) என்னும் பெயரைத் தந்துள்ளார். இணையத்தில் தேடியபொழுது இதுவே solanum xanthocarpum என்பதன் மறுபெயர் எனத் தெரிகின்றது. ஆகவே இப்பெயர்களைத் தரலாம். கீழ்க்காணும் பக்கங்களைப் பார்க்கலாம்:

  1. http://www.impgc.com/plantinfo_A.php?id=882
  2. http://www.science20.com/humboldt_fellow_and_science/blog/solanum_surattense_burm_f_syn_s_xanthocarpum_schrad_wendl_useful_cough

--செல்வா 20:54, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

நல்ல பணியை செய்துள்ளீர்கள் செல்வா. அருமை. உடனடியாக படத்தையும், இச்சொற்களையும் கண்டங்கத்திரி கட்டுரையிலும் இதிலும் சேர்த்துவிடுங்கள். கண்டு - கண்டம் - கள்ளி என்று எங்கோ படித்தது போல் தோன்றுகிறது. சொற்ப்பிறப்பியல் பற்றிய குறிப்புகளும் சேர்க்க வேண்டுகோள். --Inbamkumar86 21:03, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
  • அருமை.அற்புதமான் ஆய்வு. தொடரட்டும் உங்களின் சேவை.--த*உழவன் 01:28, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

செய்யவேண்டியவை

[தொகு]
  1. ஆதாரங்கள் செ.பே.இல் வருகிறது.வின்.அகரமுதலியின் (சில இடங்களில்(எ. கா.) அலமாப்பு) வரவில்லை. எனவே, அவற்றை தேவையில்லாத போது நீக்கும் வகையில், தனித்தனியே அமைக்க வேண்டும்.(தனித்தனி வார்ப்புருக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.)
  2. தமிழ் ஆதாரங்களை, ஒரே வரியில் கொண்டுவர வேண்டும்.--த*உழவன் 05:32, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

தீர்வு --த*உழவன் 07:31, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

கண்டேன்

[தொகு]

கண்டேன் என்பதை கண்டனான், கண்டுட்டு வாறன் என்றும் கூறுவார்கள். கண்டுகழித்தல் போன்ற சொற்களும் உண்டு. --Natkeeran 23:59, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

வினை வடிவங்கள் மிகப் பல. ஒரு வினைக்கே 300 வடிவங்கள் உள்ளன என்று மொழியியலாளர் கூறக்கேட்டுள்ளேன். வா,வந்தேன் வந்தாய் வந்தான், வந்தாள்.. போன்று முதல் வகை, அப்புறம் இறந்தகாலம் முதலான, பிறகு வந்துவிட்டான், வந்தேவிட்டான்.. இப்படி மிகப்பல. நீங்கள் கூறும் கண்டுட்டு வாறன் என்பது கண்டுவிட்டு வருகிறேன் என்பதன் பேச்சு வடிவம். பேச்சு வடிவங்கள் குழுவுக்குக் குழு தமிழ்நாட்டிலேயே மாறும். கண்டுகிட்டு வாறேன், கண்டுகிணு வறேன் இப்படியெல்லாம் போகும். கண்டுகழித்தல் வேறு கண்டுகளித்தல் வேறு, ஆனால் இவற்றையெல்லாம் தனிவடிவமாகச் சேர்க்கலாமா என்று தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் கண்டுமுடித்தல், கண்டுபிடித்தல், கண்டுதெளிதல்...போன்ற பலவடிவங்கள் உண்டு. கண்டு+வினைமுற்று என்றுவரும் வடிவங்கள் மிகப்பலவாக இருக்கும். ஒருசில சொற்களைத்தவிர (கண்டுபிடி போன்றவை) மற்றவற்றைச் சேர்ப்பது சரியாக அமையாது என்று நினைக்கிறேன்.--செல்வா 00:43, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கண்டு&oldid=775080" இலிருந்து மீள்விக்கப்பட்டது