கண்டு
Appearance
கண்டு பெயர்ச்சொல்,(வினையெச்சம்).
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெயர்ச்சொல்
- பார்த்தல், சந்தித்தல் (இலங்கை வழக்கு)
- நீளமான நூலையோ, கயிற்றையோ, நாடாவையோ, பந்துபோல் சுற்றி வைக்கப்பட்டது. நூலினைப் பந்துபோல் சுற்றிவைக்கப்பட்டால் நூல்கண்டு எனப்படும்.
- ஒரு குச்சி அல்லது குழல் மீது உருளையாக சீராக சுற்றிவைக்கப்பட்ட நூல், கயிறு, நாடா போன்றவை.
- இனிப்புக்கட்டி, கற்கண்டு
- கண்டங்கத்தரி செடி
- ஒரு வகையான சொறி
- (வினையெச்சம்) பார்த்து
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
- நான் அண்ணனைக் கண்டுட்டு வாறன்.
- (திருத்தமான வழக்கு: நான் அண்ணனைக் கண்டுவிட்டு வருகிறேன்)
- எண்ட மகனைக் கண்டு கன காலம். (இலங்கைப் பேச்சு வழக்கு)
- (திருத்தமான வழக்கு: என்றன் மகனைக் கண்டு கன காலம் ஆகின்றது).
- பலவித நூல்கண்டுகளைக் கண்டு, வேண்டுவதைத் தேர்ந்தெடுத்தேன்.
(இலக்கியப் பயன்பாடு)
- உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக சிந்தாமணி 885).
:காண் - கவனி - புலன் - கற்கண்டு - கண்டங்கத்தரி
கிளைத்தச்சொற்கள்
கண்டுமடித்தல் - Bored Watching
கண்டுமடிதல் - Died Seeing
கண்டுபிடிப்பு - FInd, Explore, Invent
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +