பேச்சு:കരാറ്
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தமிழில் கறாரான என்கிறோமே! தமிழ்ச் சொல் அல்ல என நினைக்கிறேன். அப்படியெனில் இதன் பொருள் strict, adhering to laws என்பது போன்ற பொருளைத் தரும் என நினைக்கிறேன். மலையாள விக்சனரியில் இதன் பொருள் இல்லையே! இதன் பொருளை உறுதிப்படுத்த முடியுமா? -தமிழ்க்குரிசில்
- கிழக்கத்திய சொல் ஒன்றின் பொருளை, ஆங்கிலம் போன்ற அயலக மொழியினால் தெளிவாக விளக்கிவிட இயலாது என்பதே எனது மனத்திண்ணம். சொல் ஒன்றுக்கு எண் கொடுக்கப்பட்டு, அந்த எண்ணை மொழியியல் வரையறைகளால் ஒன்றிணைக்கும் முயற்சியே indowordnet. அத்திட்டத்திற்கு போடப்பட்ட பணம் பற்றி இங்கு பேசினால், அது அரசியல் என்பர். ஆனால், அப்பணம் மக்களின் வரிப்பணம். ஆனால், அதனை பொதுமக்களிடம் சேர்க்கும் முயற்சியை, அவர்கள் செய்யவில்லை என்பதை நினைக்கும் போது, மனம் வேதனை அடைகிறது. என்னால் ஆன ஒரு சிறு முயற்சி. இங்கு பதிவது. இதை விட திறம்பட செய்ய இயலும். ஆனால், போதுமான நிரல்வன்மையோ, ஆதாரமான பொருளோ இல்லாத தால், தொழில்நுட்ப தடைகள் இங்கு ஏற்படுகின்றன. ஒரே சொடுக்கில் அவர்கள் கொடுத்துள்ள மொழிபெயர்ப்பைத் தர எனக்கும் எண்ணம் தான். அது எனது திறனுக்கும், சூழலுக்கும் அப்பாற்பட்டது. கொடுக்கப்பட்ட சொல் சரியா? தவறா? என ஆய்வது எனது முதல் இலக்கல்ல. சுந்தர் தானியங்கி போன்றவைகள் எனக்கு முன்னோடி. அதாவது முதலில் பதிவது. பின்னர் பலரால் உரையாடல் போன்றவற்றால் செம்மைப்படுத்த வேண்டும். அது கூட சிறிது காலம் தான் இங்கு நடக்கிறது. தொடர்ந்து ஈடுபடுங்கள். புதியனவற்றை கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை கலையுங்கள். பிறகு, சிறந்தன தானாகவே இங்கு மேலோச்சும். வாரம் உங்களுக்கு எவ்வளவு நேரம் செலவிடமுடியும் என்று என் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள். அந்நேரத்தில் நீங்கள் இங்கு செய்ய வேண்டிய பங்களிப்புகளை அறிமுகம் செய்கிறேன். இது போல பலர் செய்தால் தான், இப்பட்டியலில் தமிழ் பின்னேறிச் செல்லாமல் இருக்கும். indowordnet பக்கம் சென்று தமிழ்தத்தலைச் சொடுக்கி வரும் பொருளைக் காணவும். அதோடு, வார்ப்புருவுக்கான பேச்சுப்பக்கத்தினையும் காணவும். என்றும் தமிழ்விக்சனரிக்காக முதல்பதிவைச் செய்ய, நேரம் ஓதுக்குங்கள் என வேண்டி விடைபெறுகிறேன். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 11:02, 11 ஆகத்து 2013 (UTC)