வெகு எளிதாகவும், விரைவாகவும் தயாரிக்கப்படக்கூடிய நற்சுவையுள்ள ஓர் இனிப்புப் பண்டம்...இந்திய உபகண்டம் முழுவதும் பலவேறு வகைகளில், அந்தந்தக் கலச்சாரங்களுக்கேற்ப, செய்யப்பட்டு உண்ணப்படுகிறது...பம்பாய் ரவை எனப்படும் நுண்கோதுமைத் துகள், சர்க்கரை, பால், நெய், முந்திரிப்பருப்பு, திராட்சை, மற்ற உலர்பழ வகைத் துண்டுகள், ஏலக்காய்ப்பொடி, கேசர் எனப்படும் குங்குமப்பூ, தேவைப்பட்டால் அன்னாசி போன்ற பழமணச் சாறு, சிவப்பு அல்லது மஞ்சள் நிறமூட்டிப் பொடி ஆகியவையே ரவா கேசரியின் மூலப்பொருட்கள்...