கைவிளக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைவிளக்கு(பெ)
- (கையில் எடுத்துச்செல்லக்கூடிய) சிறுவிளக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இரவு ஒரு மணிக்கு ராமனாதன் உருண்டு படுத்தபோது தன் மனைவி கைவிளக்கு வெளிச்சத்தில் குனிந்து குனிந்து எழுதிக்கொண்டிருப்பதை பார்த்து மறுபடியும் திரும்பிப் படுத்தான். (புதுப் பெண்சாதி, அ.முத்துலிங்கம், திண்ணை)
- வழியில் ஒரு பாறை பள்ளதாக்கில் அந்த சிறுவன் காணாமல் போய்விடுகிறான். கைவிளக்கு ஒன்றுடன் அவனை தேடி அலைகிறார். (தனிமை கடந்து, எஸ். ராமகிருஷ்ணன்)
- பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 'கைவிளக்கு ஏந்திய காரிகை' என அழைக்கப்பட்டார்.
- இந்தக் கையேடு உங்கள் வாழ்வுக்கான கைவிளக்கு. ([1])
- ஆ.மாதவனின் உலகம் மானுடனின் இருண்ட ஆழங்களுக்குள் கைவிளக்குடன் செல்லக்கூடிய ஒன்றாக தோன்றியது எனக்கு. (மாதவம், ஜெயமோகன்)
- தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். (திருமண வைபத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?, ஈகரை)
- கை விளக்கை ஏற்றி வைத்தேன் கோயிலுக்காக (திரைப்பாடல்)
- கைவிளக்கேந்தி (சீவக சிந்தாமணி. 1542) (இலக்கியப் பயன்பாடு)
- ... (இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைவிளக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +