कुक्कुर
Appearance
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --கு1க்கு1ர
பொருள்
[தொகு]- कुक्कुर, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் காடுகளில் வசித்த குரூரமான இனமாகயிருந்த நாய்களை மனிதன் பிடித்துப் பழக்கி, தன் உற்ற விசுவாசமுள்ள உயிரினமாக மாற்றிக்கொண்டான்..விலங்கினங்களிலேயே மனிதனுக்கு விசுவாசமுள்ள உயிரினம் நாய்...பலவிதமான இனம், தோற்றம், உருவம், அளவு மற்றும் நிறம் கொண்டவையாக உலகம் முழுவதும் வாழ்கின்றன...பண்டைய நாட்களில் மனிதனுக்குக் காட்டுவிலங்களை வேட்டையாடப் பெரிதும் உதவியிருக்கின்றன/இன்றும்தான்..மனிதனின் வீடு, பண்ணை மற்றும் கால்நடைகளைக் காப்பதில் பெரும் பங்காற்றுகிறது...அரிய மோப்ப சக்திக் கொண்டவையாதலால் நவீனகாலங்களில் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் துப்பறியப் பழக்கப்பட்டு காவல் மற்றும் இராணுவத் துறைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன...பல குட்டிகளை ஈனும் நாய்கள் இயற்கையாக மாமிச உண்ணிகள்...ஆனாலும் சைவ உணவுக்கும் பழக்கப்படுத்தப்பட்ட நாய்களும் உல்ளன...மனிதன் தன் தேவை மற்றும் கற்பனைக்கு ஏற்றாற்போல பலவிதமான கலப்பின நாய்களைத் தோற்றுவித்துயிருக்கிறான்...
- நாயின் இறைச்சியை உலகின் பல நாடுகளிலும் முன்பு உண்டனர்...ஆனால் தற்காலத்தில் உலகின் மேல் நாடுகளிலும், இந்தியாவின் பெரும் பகுதியிலும், செல்லப்பிராணியாகவும், காவலுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் நாய்கள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில், முக்கியமாக நாகாலாந்து மாநிலத்திலும், சீனா,கம்போடியா, வியத்நாம், தாய்லாந்து,கொரியா போன்ற கீழைநாட்டுக் கலாச்சாரங்களிலும் உணவாகக்கூட பயன்படுத்தப்படுகின்றன...