அகதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  1. அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர்.
  2. இடம் பெயர்ந்தவர்; ஆதரவற்றோர்; நாடிழந்தவர்; புலம் பெயர்ந்தவர் [1], தஞ்சம் புகுந்தவர்.
  3. தில்லை என அழைக்கப்படும் ஒரு வகை சதுப்புநில மரம்.
  4. ஏதிலி[2]; கதியிலி, வறியவன்; வரியன், யாருமற்றவன்[3]; கதியற்றவன்
  5. வேலமரம்
  6. திக்கற்றவன்
  7. நாதியற்றவன்
  8. நாடு கடத்தப்பட்டவன்
  9. வேற்று நாட்டிற்கு குடிபுகுந்தவன்
  • அகதி என்பது புலம்பெயர்ந்தவர்களை குறிக்கும். அதாவது நாடு விட்டு வேறு நாட்டிற்கு சென்றவர்கள்; ஒரு கிராமத்தில் இருந்து வேறு ஒரு கிராமத்திற்கு அடைக்கலமாக சென்றவர்கள் - இவர்களை அகதிகள் என்று சொல்லுவார்கள்.

இதன் பயன்பாட்டை பார்க்கலாம்: 01. பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கில் அகதிகள் வந்தார்கள்; 02. இலங்கை நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு படகுகளின் மூலம் அகதிகள் வந்தார்கள். 03. பல வருடங்களுக்கு முன்பாக பர்மா போன்ற நாட்டில் இருந்து அகதிகள் இந்தியாவிற்கு வந்தவண்ணம் இருந்தார்கள்; 04. தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து வந்தவர்களுக்காக அகதிகள் குடியிருப்புகள் தனியாக உள்ளன. 05. பல நாடுகள் அகதிகளுக்கு தனி குடியிருப்புகள் கட்டிக்கொடுத்து அவர்களுக்கு வாழ்க்கை தந்து வருகின்றன.

மொழிப்பெயர்ப்புகள்[தொகு]

  1. (ஆங்) refugee
  • ஆங்கிலம் - One without resources or friends, destitute person, acacia tree

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகதி&oldid=1995076" இலிருந்து மீள்விக்கப்பட்டது