அத்திப்பழம்
Appearance
பொருள்
- அத்திப்பழம் (பெ) = அத்தி
- Ficus Glomerata--Fruit...(தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள்
- మేడిపండు தமிழ் ஒலி: மேடி3ப1ண்டு3
- அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை --- என்பது பழமொழியாகும்.
விளக்கம்
- மிகப்பழையக் காலத்திலிருந்தேப் பயன்பாட்டில் இருந்துவரும் ஒரு கனிவகை...மத்தியக் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளுமே பூர்வீகம்...தற்போது உலகெங்கும் மிதமான தட்பவெப்ப நிலையுள்ளப் பிரதேசங்களில் பழத்திற்காகவும், ஜாம், பிஸ்கட், உலர்ப்பழம்
முதலியன செய்யவும் விளைவிக்கப்படுகிறது...அலங்கார மரமாகவும் விளங்குகிறது...
- மருத்துவ குணங்கள்
- அத்திப்பழங்களால் இரத்த விருத்தி,உடலுக்கு ஊட்டம் உண்டாகும்...உடற்சூடு, சீரணக்கோளாறுகள் போகும்...
- நன்றாக முதிர்ந்து தானாகப் பழுத்து விழுந்தப் பழங்களை தேனில் ஊறப்போட்டு அல்லது சீனிக்கூட்டி தின்றால் மலச்சிக்கலையும், பித்தத்தையும் போக்கும்...
- நீர்வியாதிக்குச் செந்தூர வகைகளில் ஒரு வகையுடன் அல்லது ஒன்றோடொன்று கூட்டி நெய்யில் அனுபானம் செய்துக் கொடுத்தப் பிறகு கொஞ்சம் வேகவைத்துப் பிழிந்தெடுத்த அத்திப்பழச் சாறு கால் அல்லது அரை அவுன்ஸ் கொடுத்தால் உட்சூடு,அதிகமாக சிறுநீர் போதல்,
தாகம் ஆகியவை நீங்கும்...