அரதி
Appearance
அரதி (பெ)
- விருப்பின்மை, வேண்டாமை; உள் உந்துதல் இல்லாமை
- துன்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அரதி = அ + ரதி
பயன்பாடு
- உங்களுடைய பிரச்சினை என்ன? இதை ஆயுர்வேதத்தில் அரதி என்பார்கள். விருப்பமின்மை. பசியில்லாதவனுக்கு உணவு சுவையில்லாமலிருப்பதுபோல அரதி கொண்டவனுக்கு வாழ்க்கை சுவையற்றிருக்கிறது. (அரதி, ஜெயமோகன்)
- ரதி என்றால் காமம் என்றும் பொருள் உண்டு. காமத்தின் தேவதையின் பெயர் ரதிதேவி. காமம் என்ற சொல்லுக்கே நம் மரபில் வாழ்வின்மேல் கொள்ளும் விருப்பு என்றுதான் பொருள். மனிதனுள் உள்ள ரதியே அவனை வாழச்செய்கிறது. இயற்கை ஆளிக்கும் அனுபவம், இசை முதலிய கலைகள் அளிக்கும் இன்பம், புதிய சிந்தனைகள் அளிக்கும் கிளர்ச்சி ஆகிய அனைத்துமே ரதியின் வெளிப்பாடுகள்தான். அவற்றை இழக்கும் நிலையே அரதி. அது ஒரு நோய்க்கூறான நிலை என்று ஆயுர்வேதம் சொல்லும். (அரதி, ஜெயமோகன்)
- உன் மனதில் உள்ள அரதியை விலக்கு. உன் மனதில் வாழ்வாசையை நிரப்பு (அரதி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- அரதி கைவிஞ்சு மோகம் (திரவாய்.நூற். 62)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அரதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:விருப்பின்மை - வேண்டாமை - ரதி - துன்பம் - #