அறுகீரைவிதைத் தைலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

Amarantus Tristis seeds-Oil...(தாவரவியல் பெயர்)) அறுகீரைவிதைத் தைலம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a herbal oil made of amarantus tristis seeds

விளக்கம்[தொகு]

அறுகீரை விதைகளிலிருந்து உண்டாக்கப்படும் ஒரு தைலம்...அடிக்கடித் தொந்தரவுச் செய்யும் சாதாரணத் தலைவலி தீரவும், தலைமுடி கருக்கவும் பயன்படுத்துவர்.

தயாரிக்கும் முறை[தொகு]

  • அறு + கீரை + விதை + தைலம் = அறுகீரைவிதைத் தைலம்...ஒரு முற்றின தேங்காயைக் கொண்டுவந்து அதன் கண்களைத் திறந்து உள்ளிருக்கும் நீரையெல்லாம் போக்கி, அதனுள் கொள்ளுமளவு அறுகீரை விதைகளை அடைக்கவும்...பிறகு வாய்க்கு ஆப்பிட்டு, மெழுகு தடவி சதுப்பு நிலத்தில் ஒரு மண்டலம் புதைத்து வைக்கவும்...ஒரு மண்டலம் ஆனவுடன் தேங்காயை வெளியே எடுத்து, உடைத்து, ஓட்டை நீக்கி விதைகளை நன்றாக அரைத்து, ஒரு வீசை நல்லெண்ணெயில் கலக்கி, பதமாகக் காய்ச்சி, வடிகட்டி ஒரு சீசாவில் பத்திரப்படுத்தவும்...இந்தத் தைலத்தை வாரமொரு முறை தலைக்குத் தேய்த்து குளித்துவர தலைவலி உபத்திரவங்கள் நீங்கும்...தலைமயிரும் கருக்கும்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுகீரைவிதைத்_தைலம்&oldid=1885531" இலிருந்து மீள்விக்கப்பட்டது