அறுவை
Appearance
அறுவை (பெ)
பொருள்
- உடலின் பகுதியை அறுத்துச் செய்யும் இரண சிகிச்சை அல்லது அறுவை மருத்துவம்
- சீலை, ஆடை, உடை
- சித்திரை நாள் (நாள்மீன்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அறு என்றால் வெட்டுதல். துணித்தல் என்றாலும் வெட்டுதல். துண்டு, துணி என்பது போல அறுவை என்பதும் சீலை, ஆடை உடையைக் குறிக்கின்றது. அறுவையர் என்றால் ஆடை நெய்வோர்.அறுவை => அறுவையர்.
பயன்பாடு
- தாடை எலும்பு முறிவால் அவதிப்பட்டு வந்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு பெங்களூர் மருத்துவமனையின் இன்று (ஜன.29) அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. (சென்னை ஆன்லைன்)
(இலக்கியப் பயன்பாடு)
அந்நக ரதனில் வாழ்வார்
அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள்
மரபின் மேம்பாடு பெற்றார்
(நேச நாயனார் புராணம், சைவத் திருமுறை) [தேவாரம் வலைத்தளம்]
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அறுவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +