உள்ளடக்கத்துக்குச் செல்

அழகிய பிரான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அழகிய பிரான் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

{திருப்பூவணத்தில் (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம்) உள்ள திருப்பூவணநாதர் திருக் கோயிலில் உள்ள உற்சவருக்கு அழகிய பிரான்என்று பெயர். இந்த உற்சவர் திருமேனி தங்கத்தினால் ஆனது, இதனைச் செய்வித்தவள் ஸ்ரீ பொன்னனையாள் என்ற நடனமாது, இவள் திருப்பூவணத் திருக்கோயிலிலே நடனமாடுபவள், ஊர்வசியைப் போன்ற அழகுடையவள், அவளைப் போன்று சிறப்பாக நடனம் ஆடக் கூடியவள். இவள் திருப்பூவணத்திலே தினமும் அன்னதானம் செய்து வந்தாள். இவளுக்குத் திருப்பூவணம் உற்சவரைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆவல் திருப்பூவணநாதரின் திருவருளினால் உண்டானது. ஆனால் அதற்குத் தேவையான தங்கம் கிடைக்கவில்லை. இவளது பொருளெல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. இவள் மது​ரை சோமசுந்தரப் பெருமானிடம் வேண்டிக் கொண்டாள். ஒருநாள் மதுரை அருள்மிகு சோமசுந்தரப்பெருமான் சித்தர் வடிவில் திருப்பூவணம் வந்தார். வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு இரசவாதம் செய்து தங்கத்தை வார்த்து எடுக்கச் செய்தார். அத்தங்கத்தைக் கொண்டே திருப்பூவணத்திலே உற்சவர் வார்த்து எடுக்கப் பட்டுள்ளார். வார்த்து எடுக்கும் போது ஸ்ரீ பொன்னனையாள் அச்சோ அழகிய பிரானோ என்று அன்பினால் அள்ளி முத்தங் கொண்டாள். இதனால் உற்சவர் பெயர் அழகிய பிரான் என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ பொன்னனையாள் கிள்ளியதால் உண்டான நகக் குறியை இன்றும் அழகிய பிரான் முகத்தில் காணலாம் }}

பயன்பாடு

வார்ப்புரு:இலக்கியம்

வார்ப்புரு:புராணம்

ஆதாரங்கள் ---அழகிய பிரான்--- DDSA பதிப்பு + வின்சுலோ + <36ஆவது திருவிளையாடற் புராணம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழகிய_பிரான்&oldid=676897" இலிருந்து மீள்விக்கப்பட்டது