அவிர்ப்பாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அவிர்ப்பாகம்

  • வானோர் . . . அவிர்ப்பாகம் (உத்தரரா. திக்குவி. 120).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்
பயன்பாடு
  • சிவனாரை அவமதிக்கும் விதமாக, தட்சன் மாபெரும் யாகத்துக்கு ஏற்பாடு செய்து, தேவர்களுக்கு அழைப்பு விடுத்தான். ஸ்ரீபிரம்மன், ஸ்ரீநாராயணன் மற்றும் தேவர்களும் தேவியரும் யாகத்துக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், தன் மருமகன் ஈசனுக்கு மட்டும் வேண்டுமென்றே அழைப்பு அனுப்பவில்லை தட்சன். அத்துடன் "யாகத்தில் சிவனுக்கு அவிர் பாகம் கொடுக்கக்கூடாது" என்றும் கட்டளையிட்டான்
  • '"நீங்கள் அவிர் பாகம் தரமறுத்த என் சிவனுக்கு, என் உடலையும் ஆவியையும் இதே யாக சாலையில் நானே அவிர் பாகமாக அர்ப்பணித்து விடுகிறேன்" என்று கூறி பிராணத் தியாகம் செய்து, உயிரற்ற உடலாக யாகசாலையில் வீழ்ந்தாள் சதி எனும் தாட்சயாயினி
  • சிவனின் ருத்ராம்ஸங்களில் ஒன்று அகோர வீரபத்ரராக உருவெடுத்து தட்சனின் யாக சாலையில் தோன்றியது. அங்கே, அகோர வீரபத்ரரின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தது. யாகசாலை அழிந்தது. தட்சனின் சிரம் கொய்யப்பட்டது. தன் தந்தை தட்சனுக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டுமென அன்னை உமை கேட்க, தலை கனத்துத் தவறுகள் புரிந்த தட்சனுக்குப் புதிய தலையைக் கொடுத்து உயிர் தந்தார் சிவபெருமான். இப்போது தட்சனின் தலை ஆட்டுக்கடாவின் தலையாக இருந்தது. மகரிஷிகளின் ருத்ர ஜபத்துடன் மீண்டும் யாகம் தொடங்கியது. ஆட்டுத்தலை பெற்ற தட்சன், யாகத்தில் சிவனுக்கு முதல் அவிர் பாகம் தந்து, அவரது பாதங்களை வணங்கி பூதகணங்களில் ஒருவனாகத் தன்னையும் ஏற்று அருள்புரியும்படி வரம் கேட்டான். சிவனும் அவ்வாறே வரம் தந்தருளினார்.(தெரிந்த புராணம்... தெரியாத கதை!, சக்தி விகடன், 26-ஜூன் -2012)
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---அவிர்ப்பாகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவிர்ப்பாகம்&oldid=1112212" இலிருந்து மீள்விக்கப்பட்டது