அஷ்ட பிரபந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அஷ்ட பிரபந்தம்:
--திருமால் வைணவர்களின் முழுமுதற் கடவுள்


பொருள்[தொகு]

  • அஷ்ட பிரபந்தம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अष्ट + प्रबन्ध--- अष्टप्रबन्ध---அஷ்ட1ப்1ரப3ந்த4---மூலச்சொல்
  1. ஒரு தமிழ் நூல்

விளக்கம்[தொகு]

  • திராவிட வேதம் என்றுக் கொண்டாடப்படும் வைணவர்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் புனித பக்தி இலக்கியம் தமிழில் தோன்றியபிறகு, 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய மணவாள தாசர் என அழைக்கப்பட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் வைணவ அடியவரால் இயற்றப்பட்ட சீரும், சிறப்புமான ஒரு வைணவப் பக்தி இலக்கியம்... இது ஒரு தொகை நூலாகும்...இதில் கீழ்கண்ட எட்டு நூல்கள் அடக்கம்..

1. திருவரங்கக் கலம்பகம்
2. திருவரங்கத்து மாலை
3. திருவரங்கத்தந்தாதி
4. சீரங்க நாயகர் ஊசல் திருநாமம்
5. திருவேங்கட மாலை
6. திருவேங்கடத்தந்தாதி
7. அழகர் அந்தாதி
8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

மிகவும் புகழ் பெற்ற, வைணவ பக்தி மணம் கமழும், இந்தநூற்களை ஆழ்ந்துக் கற்றால், தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் பாதியளவு தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற உட்கருத்தில் ‘அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்’ என்கிற வழக்கு உள்ளது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a Vaishnavite Tamil literary work


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஷ்ட_பிரபந்தம்&oldid=1883037" இருந்து மீள்விக்கப்பட்டது