உள்ளடக்கத்துக்குச் செல்

ஆற்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  1. ஊக்கம் - vigour
  2. வலிமை - force
  3. வீரியம் - stamina
  4. ஆற்றல் - ability
  5. சாரம்
  6. வல்லமை
  7. திறமை

ஆற்றல் வரையறை

[தொகு]

ஆற்றல் (energy) என்பது செய்யப்பட்ட / செய்யப்பட முடிந்த வேலையின் அளவு ஆகும். ஆற்றல் பல வடிவங்களில் உள்ளது.

ஆற்றல் வடிவங்கள் (Forms of energy).

[தொகு]

நிலை ஆற்றல் - (potential energy)
இயக்க ஆற்றல் - (kinetic energy)
வெப்ப ஆற்றல் - (thermal enegy)
காந்த ஆற்றல் - (magnetic energy)
ஒளி ஆற்றல் - (photo energy)
மின் ஆற்றல் - (electric energy)
வேதி ஆற்றல் - (chemical energy)
அணு ஆற்றல் - (atomic energy)

ஆற்றல் அழிவின்மை விதி (Law of conservation of energy)

[தொகு]

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றலாம். ஒரு தொகுப்பில் உள்ள ஆற்றலின் கூட்டுத்தொகை ஒரு மாறிலி.

நிலை ஆற்றல்

[தொகு]

ஒரு பொருள் அதன் நிலையால் பெற்றுள்ள ஆற்றல், நிலை ஆற்றல் எனப்படும். நிலை ஆற்றல் ஒரு பொருள் நிலை ஆற்றலை தன்னுள் தேக்கி வைக்கிறது. நிலை ஆற்றல் ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் போது இயக்க ஆற்றலாக வெளிப்படுகிறது. நிலையாற்றலைப் பொதிவாற்றல் என்றும் கூறலாம்.

ஒரு பொருளின் நிலையானது அது நிலை ஆற்றலை வெளிப்படுத்தும்போது மாறுபடுகிறது; பொருளின் நிலையை மாற்றும் தன்மையுடையதால் இவ்வகை ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படுகிறது.


இயக்க ஆற்றல்

[தொகு]

ஒரு பொருள் அதன் இயக்கவழித் தரும்/பெற்றுள்ள ஆற்றல், இயக்க ஆற்றல் எனப்படும்.

சொல்வளம்

[தொகு]
  1. ஆற்றலாட்சி - ஆற்றல் + ஆட்சி - meritocracy
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆற்றல்&oldid=1969260" இலிருந்து மீள்விக்கப்பட்டது