உள்ளடக்கத்துக்குச் செல்

இசக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இசக்கி(பெ)


விளக்கம்
  • இசக்கி அம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வமாவார். இவர் பெரும்பாலான இந்து சமயக் கோயில்களில் கையில் குழந்தையுடன் காட்சிதருகிறார். இந்தத் தெய்வத்தைப் பழையனூர் நீலியின் வடிவம் என்ற கருத்து உள்ளது. குழந்தைப் பேறில்லாத பெண்கள் இவரை வழிபட்டால் குழந்தைப் பிறக்கும் என்பதும், மாதவிடாய்ப் பிரச்சனையுள்ளவர்கள் இவரை வழிபட்டால் அப்பிரட்சனைத் தீரும் என்பதும் நம்பிக்கையாகும். இந்து சமய பெண் தெய்வக் கோயில்களில் பிரதானமாக இவருடைய சன்னதி அமைந்துள்ளது. தென் தமிழகத்தில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம் இருந்தது, இருப்பினும் தற்போது தமிழகம் முழுவதும் இசக்கியம்மன் வழிபாடு காணப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகள் ---இசக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இசக்கி&oldid=1996820" இலிருந்து மீள்விக்கப்பட்டது