இளநீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
இளநீர்
செவ்விளநீர்
  1. உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது
  2. எல்லா காலத்திற்கும் பொருத்தமான ஒரு பானம் தான் இளநீர். எங்கெல்லாம் தென்னை மரங்கள் விளைகின்றனவோ, அங்கெல்லாம் இந்த தேங்காய்கள் கிடைக்கும். சொல்லப்போனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா கடற்கடையோர பிரதேசங்களில் தென்னை மரங்களுக்கு பஞ்சமே இல்லை.

கேரளாவில் உள்ள கிராமங்களுக்கு சென்றால், மிகவும் குறைந்த விலைக்கு தருவார்கள். கேரளாவில் உள்ள அணைத்து உணவுப்பொருட்களிலும் தேங்காய் கண்டிப்பாக சேர்ப்பார்கள். இளநீர் என்பது என்ன? மரத்தில் இருந்து பறித்து வரும் தேங்காயை அரிவாளால் வெட்டி உரித்து பார்க்கும்போது நமக்கு கிடைப்பது - 01. தண்ணீர் மட்டுமே - இது தான் இளநீர். அதாவது இந்த தண்ணீர் தவிர வேறு எதுவும் கிடைக்காது. 02. 80 சதவீதம் தண்ணீர் (இளநீர்) - 20 சதவீதம் உண்பதற்கு இலகுவான தேங்காய் - இதை வழுக்கை என்று சொல்லுவார்கள். 03. தண்ணீர் மிகவும் குறைவு - வழுக்கைக்கு பதிலாக பதமான பருக்கை - இதை தான் தேங்காய் என்று சொல்லுகிறோம். இந்த தேங்காய் தான் உணவுப்பொருட்களை தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். அப்படியே வெயிலில் காயப்போட்டு விட்டால், இரண்டு நாட்களில் நீர் வற்றி, தனியாக கழன்று வந்து விடும். இதை கொப்பரை என்று சொல்லுவார்கள். இந்த கொப்பரையை அரைத்து அதில் இருந்து தேங்காய் எண்ணெய் எடுப்பார்கள். அப்படியானால் தேங்காய் எண்ணெய் என்று நாம் பயன்படுத்தும் பொருளின் மூலப்பொருள் தான் இளநீர். இப்போது கற்பனை செய்து கொள்ளலாம் - அதில் எத்தனை சத்துக்கள் அடங்கியிருந்திருக்கும் என்று. தமிழ் நாட்டில், பொள்ளாச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மாயவரம், கன்னியாகுமரி போன்ற தென்னை மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இவை அதிகம் கிடைக்கின்றன. இளநீர் உண்பதால் கிடைக்கும் பலன்கள்: 01. தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும். குறிப்பாக சோரியாசிஸ் என்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரண்டு இளநீர் காய்கள் பயன்படுத்துவதால், அதிக பலன்கள் பெறமுடியும். 02. எலெக்ட்ரோலெட் என்று வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சி, குளிர்ச்சி, இரத்த சுத்தி போன்ற பலன்களை தருகிறது. அதனால் தான் வயிற்று பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் நீர் சத்து குறைபாடு உள்ளவர்களை மருத்துவர்கள் அதிகம் இளநீர் குடிப்பதற்கு வற்புறுத்துகிறார்கள். 03. நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து; 04. நார்ச்சத்து அதிகம் உள்ள நீர் இது. பொதுவாகவே நார் சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் மட்டுமே இருக்கும். இளநீரில் அதற்கு ஈடாக அடங்கியுள்ளது. நார்ச்சத்து இருப்பதால், இரைப்பை, சிறு குடல் மற்றும் பெருங்குடல் என்ற உணவுப்பாதைகளை சுத்தம் செய்து, அவற்றில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, அவை சீராக வேலை செய்வதற்கு இளநீர் பயன்படுகிறது. இதில் அதிகம் உப்புச்சத்து, தாதுக்கள் அடங்கியுள்ளன.

---:::  :::---

பொருள்
மொழிபெயர்ப்புகள்

{ஆதாரம்} ---> சென்னை இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளநீர்&oldid=1906951" இருந்து மீள்விக்கப்பட்டது