இஸ்லாம்
பெயர்ச்சொல்[தொகு]
இஸ்லாம்
இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும்.
இஸ்லாம் மார்க்கத்தில் ‘இஸ்லாம்’ என்பதற்கு ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக அவரை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப அர்ப்பனித்தல் என்றே சொல்லப்படும்.
அகில உலகங்களையும் படைத்து, உணவளித்து பரிபாலித்து வரும் ஒரே இறைவன் அல்லாஹ் என்றும் அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான வேறு இறைவன் யாரும் இல்லை என்றும் அவனுடைய படைப்பினங்களான மனிதர்களுக்கு சத்திய நேர்வழி காட்டிட அவன் ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதல் தொடராக இறைவன் அனுப்பிய தூதர்களில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்றும் நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.
ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இறைவன் சூட்டிய பெயர் முஸ்லிம்கள் என்பதாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரின் வரிசையில் வந்த இறுதி தூதரே அன்றி வேறில்லை என முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
இஸ்லாமியர்களின் கடவுள் கொள்கை: -[தொகு]
Ø அகில உலகங்களையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து வருபவன் ஒரே இறைவன் - அவன் தான் அல்லாஹ்
Ø அவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை
Ø அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது
என்பதாகும். இந்த ஏக இறைவனையே ஆதி மனிதர் ஆதாம் முதற்கொண்டு, நோவா, ஆபிரஹாம், மோஸஸ், இயேசு போன்ற இறைத்தூததர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் வணங்கினர்.
அல்லாஹ் என்ற அரபி சொல்லிற்கு இறைவன் என்பது பொருள். அரபி மொழியைத் தாய் மொழியாக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களும் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர்.
இறைவன் தன்னுடைய இலக்கணங்களாக அவன் இறுதியாக அருளிய வேதம் அல் குர்ஆன் அத்தியாயம் 112 ல் கூறுகிறான்: -
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
இந்த நான்கு வரிகளே இஸ்லாத்தின் அடிப்படைக் கடவுள் கொள்கையாகும்.
முஹம்மது நபி (ஸல்) போதித்தது என்ன?[தொகு]
இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிய அனுப்பி வைத்த தீர்க்க தரிசிகளில் கடைசியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவார்கள். நோவா, ஆப்ரஹாம், தாவீது, இயேசு போன்ற தீர்க்க தரிசிகளுக்கு இறைவன் எந்த மார்க்கத்தை போதிப்பதற்காக அருளினானோ அதே மார்க்கத்தையே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அருளினான். பலர் தவறாக எண்ணியிருப்பது போல முஹம்மது நபி அவர்கள் எந்த ஒரு புதிய கொள்கையையோ அல்லது மதத்தையோ தோற்றுவிக்கவில்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட இறுதிவேதமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டி முஸ்லிம்கள் அனைவரும் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழவேண்டும் என வலியுறுத்திச் சென்றிருக்கிறார்கள்.
எனவே ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளின் படியும், அந்த இறுதி தூதருக்கு அவன் அருளிய இறுதி வேதத்தின் வழிகாட்டுதல்களின் படியும் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் யாவை?[தொகு]
இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து. அவைகளாவன: -
ஏகத்துவ நம்பிக்கை கொண்டு அதற்கு சான்று பகர்தல்
தொழுகையை நிலை நாட்டுதல்
ஸகாத் வழங்குதல்
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றல்
வசதி பெற்றிருப்பின் ஆயுளில் ஒருமுறையேனும் மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - Islam