ஓம்புதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
ஓம்புதல்(வி)
- பாதுகாத்தல்
- குடிபுறங் காத்தோம்பி (குறள், 549)
- பேணுதல்
- ஈற்றியாமை தன்பார்ப் போம்பவும் (பொருந. 186))
- தீதுவாராமல் காத்தல்
- பரிகரித்தல்
- எனைத்துங் குறுகுத லோம்பல் (குறள், 820)
- வளர்த்தல்
- கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1)
- சீர்தூக்குதல்
- ஓம்பாவீ கையும் (பு. வெ. 9, 1)
- மனத்தை ஒருக்குதல்
- தெரிந்தோம்பித் தே ரினு மஃதே துணை (குறள், 132)
- இவறுதல்
- பெற்றே மென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626)
- உண்டாக்குதல். (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- To protect, guard, defend, save
- To preserve; to keep in mind; to cherish, nourish
- To remove, separate; to keep off; to ward off
- To dispel
- To maintain, support; to cause to increase; to bring up
- To consider, discriminate
- To concentrate the mind
- To clutch or grasp tightly, as a miser
- To create
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +