ஓயாமாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓயாமாரி மழையால் வெள்ளம்
ஓயாமாரிக் குழந்தை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஓயாமாரி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

 1. இடைவிடாத (நிற்காத) மழை
 2. தொடரும் பெருங் கொடை.
 3. பொழுதெல்லாம் அழுதுகொண்டிருக்கும் குழந்தை

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. incessant rain
 2. unceasing liberality
 3. an infant which cries all the time.

விளக்கம்[தொகு]

 • சொற்களின் பொருளின்படி ஓயாத மழை என்றாகிறது...தொடர்ந்து ஓயாத மழையைப்போல வரும் பெரும் கொடையும் ஓயாமாரி எனப்படும்...நாளெல்லாம் ஓயாமல் விடாத மழையைப் போல் அழுதுகொண்டேயிருக்கும் குழந்தைகளையும் இந்தச்சொல் இளப்பமாகக் குறிக்கும்...

பயன்பாடு[தொகு]

 • அந்த சாந்தாவின் குழந்தை ஒரு பெரிய ஓயாமாரி...எப்படித்தான் சமாளிக்கிறாளோ!?
 • ஒரு வாரமாக ஒயாமாரியாக மழை பெய்துகொண்டே இருக்கிறது...வெளியே தலைக் காட்ட முடியவில்லை...
 • இப்படி ஒயாமாரியாக நன்கொடைகள் வந்துக்கொண்டிருந்தால், சீக்கிரமே பள்ளிக்கூடம் கட்டிவிடலாம்!


"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓயாமாரி&oldid=1225727" இருந்து மீள்விக்கப்பட்டது