கடைநாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கடைநாள்:
கட்டிலில் கிடக்கும் கடைசி/மரண நாளைச் சந்திக்கப்போகும் ஒரு மனிதன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • கடை + நாள் = கடைநாள்

பொருள்[தொகு]

 • கடைநாள், பெயர்ச்சொல்.
 1. கடைசிநாள்
 2. மரணநாள்
  (எ. கா.) கடைநா ளிதுவென் றறிந்தாரு மில்லை (கலித். 12).
 3. ஊழிக்காலம்
 4. காண்க..இரேவதி (சூடாமணி நிகண்டு)
 • இந்துப் பஞ்சாங்கப்படி இருபத்துஏழாம் நட்சத்திரம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. the last day
 2. the last day of one's life
 3. the last day of the world
 4. the 27th nakṣatra, from its being the last asterism

விளக்கம்[தொகு]

 • உலகில் உயிரினங்கள் உட்பட எல்லாமே ஒரு நாளில் முற்றிலும் அழிந்துப்போய்விடக்கூடியவையேயாகும்..அந்தக் குறிப்பிட்ட சமயத்தையே, கடைநாள் அதாவது கடைசி நாள், என்பர்...உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துப்படக்கூடிய நாளை ஊழிக்காலம் என்று குறிப்பாகச் சொல்வர்...மேலும் கடைநாள் என்னும் சொல் இந்துப் பஞ்சாங்கத்தில் கடைசி நட்சத்திரமான இருபத்து ஏழாவது நட்சத்திரம் இரேவதி வரும் நாளையும் குறிக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைநாள்&oldid=1643565" இருந்து மீள்விக்கப்பட்டது