கணையம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி
- அரசனது காவலில் உள்ள காடு; புரவுக்காடு, மிளை, அரண்; தற்காலத்தில் இயற்கையைக் காக்கும் முகமாக அரசுகளால் காப்பில் இருக்கும் காடு.
- தண்டாயுதம்; வளைதடி
- குறுக்கு மரம்
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- அம்பொடு கணையம் வித்தி (சீவக சிந்தாமணி 757).
- காடு என்பதன் விளக்கம்: பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44). இது 1934 இல் வெளிவந்தது.
[இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995]
-
கணையம்
-
சிறு தண்டாயுதம்
-
குறுக்கு மரம்
-
சிறு குறுக்கு மரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - pancreas
- ஆங்கிலம் - protected forest
- cross-bar
- cross-bar of wood set behind closed doors of a forest
( மொழிகள் ) |
சான்றுகள் ---கணையம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி