கம்மியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கம்மியன், பெயர்ச்சொல்.

  1. கைவினைஞர், தொழில் நிபுணன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. craftsman, artisan
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ‘கம்மியன்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் நற்றிணை, புறநானூறு, நெடுநல்வாடை, மலைபடு கடாம் ஆகிய நான்கு நூல்களுள் ஆறு இடங்களிலும், ‘கம்மியர்’ என்ற சொல் இரண்டு இடங்களிலுமாக எட்டு இடங்களில் பயின்று வருகின்றன. அச்சொல் வெவ்வேறு கைத்தொழில் சார்ந்தவர்களைச் சுட்டுவதாக சங்க காலத்தில் வழங்கியுள்ளது.
  • நெடுநல்வாடையில், கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க (நெடு. 56 - 59)



( மொழிகள் )

சான்றுகள் ---கம்மியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்மியன்&oldid=1254001" இலிருந்து மீள்விக்கப்பட்டது