உள்ளடக்கத்துக்குச் செல்

கரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஆங்

[தொகு]
  1. device


பொருள் & மொழிபெயர்ப்பு

[தொகு]

பெ.(n.)

தலை கீழாகப் பாய்கை (மதுரை மாவட்டம்);; somersault.

[கரு-கரணம்]



பெ.(n.)

1. அறிவுக்கருவி (அகக் கருவி), உறுப்புக் கருவி (புலனறிவு) intellect, cognition.

2. மனம் mind.

  பொறியொடு கரணத் தப்புறம்   (கம்பரா.தைல.27);.

[கரு → கரணம் (செய்கை.]


1. கையாற் செய்யுந்தொழில் work by one's hand.

  சித்திரக் கரணஞ் சிதைவின்று செலுத்தும்(சிலப் 3: 54).

2. பொறிகள் organ of sense,

  கரணங்க ளெல்லாங் கடந்து(திருவாச. 10, 9);.

3. வதுவைச்சடங்கு marriage ceremony.

  ஐயர் யாத்தனர் கரண மென்ப(தொல், பொருள். 145).

4. கலவி (சூடா) coition.

5. கூத்தின் மாறுபாடு a variety in dramatic action, a kind of dancing.

  கரணமிட்டுத் தன்மை பேசி(தேவா. 56:3).

6. தலைகீழாகப் பாய்கை; somer-sault, tumbling heels over head, caper.

வயிற்றுப் பிழைப்புக்குக் கம்பத்திலே கரணம் போடுகிறான் (உ.வ.).

7. இன்றியமையாது வேண்டப்படும் கருவி, மூலப்பொருள் implement, means, material, instrument.

  அதனதனுக்குரியl வாய பல்கரன முந்தருதி(கந்தபு. குமாரபுரி. 65);.

ம. கரணம்

த. கரணம் → Skt. karana (மு.தா.176)

[கரு → கரணம். கருத்தல் = செய்தல்.]



பெ.(n.)

1. கணக்கன், (S.I. l.l.65.) accountant, karanam.

2. ஆவணம்; titledeed, document.

[கரு → கருணம் → கரணம். கரு = செய். கரணம் = செய்பவன், எழுத்துப்பணியாளன், அவனால் எழுதப்பட்ட ஆவணம்.]

த. கரணம் → Skt. karana.


1. நீத்தார் நிகழ்விற்குரிய பண்டங்கள் ingredients mixed and used in connection with funeral rites.

[கரு → கருணம் → கரணம். கரு = செய். கரணம் = செய்யப்பட்ட பண்டம் நீத்தார்க்குப் படைக்கும் பண்டங்கள்.]


பெ.(n.)

1. மெய்ப்பொருள்; philosophy.

  கரணமனைத்தும்(கோயிற்பு. நடராச. 22);.

[கரு → கருணம் → கரணம். கரு = செய். கரணம் = உடற்பொருள், மனம், பூதங்கள் நிலையைத்துழாவி ஆராய்வது.]


1. விருப்பம் (யாழ்.அக.);; desire.

ம.கரணம்

[கரு → கருள் → கருளம் → கருணம் → கரணம். கருள் = மனம், இதயம்.]



ஆதாரங்கள்

[தொகு]

செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரணம்&oldid=1969459" இலிருந்து மீள்விக்கப்பட்டது