கரந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கரந்தை-திருநீற்றுப்பச்சை
கரந்தை-கொட்டைக்கரந்தை
கரந்தை-வெர்னொனியா அர்போரெயா என்னும் மரவகை
கரந்தை-நீர்ச்சேம்பு இப்படி இருக்குமோ?

தமிழ்[தொகு]

{ஒலிப்பு}}

இல்லை
(கோப்பு)

கரந்தை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

 1. திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை/சப்ஜாச்செடி எனும் மூலிகை.
 2. கொட்டைக்கரந்தை/ காய்த்த கரந்தை
 3. ஒரு மரவகை
 4. நீர்ச்சேம்பு
 5. குரு
 6. கரந்தைத்திணை
 7. கரந்தைப்பூமாலை
 8. அறுவடை முடிந்து பயிரின்றி வெறுமையாக, தரிசாகக் கிடக்கும் நிலம் (தரிசு நிலம் என்பது அமங்கலம் என்பார்கள், தரிசு என்று சொல்லாமல், கரந்தை என்று சொல்வதுண்டு. அறுவடை முடிந்துள்ள கரந்தை நிலம் புழுதிபடிந்த நிலமாக இருக்கும்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. a variety of indian basil; sweet basil, m. sh., ocimum basilicum
 2. indian globe-thistle - a plant
 3. iron-weed, vernonia arborea - a tree
 4. arrow-head aquatic plant
 5. priest
 6. theme of recovering the herd of cows seized by the enemy as a signal of the declaration of hostilities in ancient tamil kingdoms
 7. chaplet of karantai flowers worn by warriors when recovering cows that had been seized by the enemy in ancient tamil kingdoms

விளக்கம்[தொகு]

 • கரந்தை என்னும் சொல் குறிப்பிடும் திருநீற்றுப்பச்சை என்னும் மூலிகை பலவிதமான மருத்துவ குணங்களுள்ளது...கரந்தை என்னும் சொல் அநேக தாவரங்களின் பெயர்களோடு இணைந்து பொதுப் பெயராகவும் விளங்குகிறது...
 • பண்டைய நாட்களில் பகைவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்க போரிடும்போது படை வீரர்கள் இந்தக் கரந்தை மலர்களாலான மாலையைதான் அணிந்துக்கொள்ளுவார்கள்...இந்தப் போர்ச்செய்கைக் கொள்கையை கரந்தைத்திணை என்பர்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=கரந்தை&oldid=1517785" இருந்து மீள்விக்கப்பட்டது