கலப்பை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மண்ணைத் தோண்டி நிலத்தை உழப் பயன்படுத்தும் வேளாண்மைக் கருவி. இக்கருவியை நிலத்தின் மீது அழுத்திப் பிடித்துக்கொண்டு இழுக்கச் செய்தால், கீழ்மண் மேலாக வருமாறு கிளறப்படுவது மட்டுமல்லாமல், விதை முளைக்க ஏதுவாக மண் இறுக்கம் (கெட்டிப்பு) குறைவாக மாறும்படிச் செய்ய உதவும் செய்யும் கருவி. கலைப்பையை ஏர் அல்லது ஏர்க்கால் என்றும் கூறுவர்.
மிக எளிமையானதொரு கலப்பையைப் படத்தில் காணலாம்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- நிலத்திலுள்ள மேல்மண்ணைக் கீழ் மண்ணோடு
- நீண்டுள்ள கூர்முனையால் ஒன்று கூட்டி
- கலப்புதனை உண்டாக்கும் கார ணத்தால்
- கலப்பையென்று பெயரிட்டார் (சுரதா கவிதை)