உள்ளடக்கத்துக்குச் செல்

கலகலப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) கலகலப்பு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • கல்யாண வீடு கலகலப்பாக இருக்கிறது (the home of marriage was all joy)
  • அவன் கலகலப்பாய் இருக்கிறான் (he is happily socializing)

(இலக்கியப் பயன்பாடு)

  • மாமல்லர் கேட்போரின் மான உணர்ச்சியைத் தூண்டும் வீரமுள்ள வார்த்தைகளைப் பேசிக் கொண்டு வந்த போது, சபையிலே கலகலப்பு ஏற்பட்டது. மாமல்லருடைய வார்த்தைகளில் உண்மை இருக்கிறது என்பதை ஆமோதித்து ஒருவரோடொருவர் கசமுசவென்று பேசிக் கொண்டார்கள் (சிவகாமியின் சபதம், கல்கி)
  • பட்டாபியும் சீதாவும் உற்சாகமாகப் பேசிக் கொள்வார்கள். வீட்டில் பொதுவாகக் கலகலப்பு அதிகமாயிற்று. இது லலிதாவுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது (அலை ஒசை, கல்கி)
  • சற்று முன் கலகலப்பாக இருந்த சாலையில் நிசப்தம் குடிகொண்டது (சிவகாமியின் சபதம், கல்கி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலகலப்பு&oldid=1969380" இலிருந்து மீள்விக்கப்பட்டது