உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்வாய் எண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கீழ்வாய் எண் (பெ)

  • ஒன்று என்னும் முழு எண்ணுக்கும் குறைவான பகுதிகளைக் குறிக்கும் எண்கள் கீழ்வாய் எண்கள் எனப்படும். எடுத்துக்காட்டாக ஒன்றில் பாதி, 1/2 (அரை) என்பது ஒரு கீழ்வாய் எண். 3/4 (முக்கால்) என்பது ஒரு கீழ்வாய் எண். பிள்வம், பின்னம் என்றும் அறியப்படும்.
  • தமிழில் கீழ்வாய் எண்களுக்கும் குறிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, என்பது 1/4 என்னும் கீழ்வாய் எண்ணின் குறி.
  • அரை, கால், அரைக்கால், முக்கால், அரையேயரைக்கால் (5/8), வீசம் (1/16), முக்காலே மூன்றுவீசம் (15/16), மா (=1/20), இருமா (1/10), மும்மா (3/20), காணி, மாகாணி ஆகியவை சில கீழ்வாய் எண்களில் பெயர்கள்.
விளக்கம்
  • ஒன்றுக்கு மேலான எண்களை மேல்வாய் எண் என்பர்.பத்து, நூறு, ஆயிரம், 27 என்பன மேல்வாய் எண்கள்.
  • அரையேயரைக்கால், முக்காலே மூன்று வீசம் போன்ற சொற்றொடர்களில் வரும் ஏகாரம் எண்ணுப் பொருள், இடைச்சொல் ஏகாரம் (அதாவது அரையேயரைக்கால் என்பது, அரை +இடைச்சொல் ஏ+ அரைக்கால் என்று அரையோடு (1/2) அரைக்காலும் (1/8) சேர்ந்த கீழ்வாய் எண் 1/2+1/8 = 5/8 என்னும் கீழ்வாய் எண். இப்படியே முக்காலே மூவீசம் அல்லது முக்காலே மூன்று வீசம் = 3/4 + 3/16 = 15/16)
பயன்பாடு
  • -
மொழிபெயர்ப்புகள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழ்வாய்_எண்&oldid=948759" இலிருந்து மீள்விக்கப்பட்டது