உள்ளடக்கத்துக்குச் செல்

குடைமிளகாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
விளக்கம்

குடத்தைப்போல் உருவமுள்ளதால் குட மிளகாய் எனப்பட்டு பிறகு குடை மிளகாய் என்று மருவியது... இதை தஞ்சாவூர் மிளகாய் என்றும் கூறுவர்...இவை சிறிய வகையாகும்.. வடநாட்டு குளிர்ப் பிரதேசமான சிம்லாவிலிருந்து அறிமுகமானதால் சிம்லா மிளகாய் என்றும் பெயர் கொண்டது... தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் பயிரிடப்படும் பெரியவகையான, பல்வகை நிறமுள்ள, குடைமிளகாய் மிகப் பிரசித்திப்பெற்றது...இவை,பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கின்றன...குறைந்தக் காரச்சுவையும், ஒருவகை மணமும் கொண்ட குடைமிளகாய் கறி செய்யவும் புலவு, காய்க்கலவை, தயிர்ப்பச்சடி போன்ற இன்னும் பலவிதமான உணவு பதார்த்தங்கள் செய்யவும் பயனாகிறது...சிறு குடைமிளகாய்களைப் புளித்தத் தயிரில், உப்பிட்டு ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தி வத்தலாக்கி எண்ணெயில் பொறித்துத் தயிர் சாதத்தில் தொட்டுக்கொண்டு உண்பார்கள்...

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bell pepper, capsicum
  • இந்தி
  1. शिमला मिर्च
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடைமிளகாய்&oldid=1885516" இலிருந்து மீள்விக்கப்பட்டது