குதர்க்கம்
Appearance
குதர்க்கம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- unreasonable or perverse argument; fallacious, captious argument, sophistry - (நியாயமற்ற) எதிர்வாதம்; விதண்டா வாதம்.
- cavil, specious objection - இடக்குமடக்கு
- impediment in business, embarrassment - குந்தகம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அது பெண்ணைக் குறிக்கும் என்று வாதிடும் இவர் அதற்கான இலக்கண ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு எடுத்துக் காட்ட முடியாததால் நாம் எழுதிய வாசகத்தில் குதர்க்கம் செய்து முரண்பாட்டைக் கொண்டு வர முயற்சித்துள்ளார். ([1])
- "(அய்யனாரை) உனக்குத் தெரியாதா? நம் குடும்பத்தின் குல தெய்வம்! ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்". "ஓகோ! அப்படியா? நான் என்ன நினைத்தேன் சொல்லட்டுமா, அத்தை! அய்யர்களிலே பணக்காரர்களுக்கு 'அய்யனார்' என்ற பட்டப் பெயரோ என்று நினைத்தேன்." "சீதா! எதற்கும் ஒரு குதர்க்கம் பேசுகிறது என்று வைத்துக் கொண்டிருக்கிறாய். இது நன்றாயில்லை, பெரியவர்கள் சொல்கிறதைப் பயபக்தியோடு கேட்டுக் கொள்ளவேணும்." (அலை ஓசை, கல்கி)
- குதர்க்கம் விளைத்தே - பெருங் கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்! (பாரதிதாசன்)
- கோதுறுங் குதர்க்கமென்ற கோரவீர வாளி (பிரபோத. 34, 22)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குதர்க்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +