குபேர சம்பத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குபேர சம்பத்து:
செல்வத்திற்கெல்லாம் இறைவனான குபேரன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--कुबेर + सम्पद--கு1பே3ர +ஸம்ப13--வேர்ச்சொற்கள்= குபேர சம்பத்து

பொருள்[தொகு]

  • குபேர சம்பத்து, பெயர்ச்சொல்.
  1. பெரும் செல்வம்
  2. அளப்பரிய செல்வம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. enormous wealth
  2. the riches as of lord Kubera

விளக்கம்[தொகு]

  • சமூகத்தில் அளப்பரிய பெரும் செல்வம் படைத்தோரை குபேர சம்பத்து உடையவர் எனக் குறிப்பிடுவர்...குபேரன் செல்வங்களுக்கு அதிபதியான தேவதை...தேவர்களில் பெரும் செல்வந்தரான இவர் திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்காகக் கொடுத்தக் கடன் இன்றுவரை தீரவில்லை என்பர்...सम्पद--ஸம்ப13 என்றால் சமசுகிருதத்தில் செல்வம் என்று பொருள்...இதுவே தமிழில் சம்பத்து என்று ஆகிறது...ஆகவே வீடு வாசல், நிலம் நீச்சு, தோட்டம் துரவு, தங்க ஆபரணங்கள், நவரத்தினங்கள், கால்நடை போன்று வகைப்படுத்தப்பட்ட அத்தனை செல்வங்களும் மிகப்பெரிய,கணகற்ற அளவில் சேர்ந்திருந்தால் அது குபேர சம்பத்து எனப்படும்.

பயன்பாடு[தொகு]

  • அவருக்கென்ன? விட்டால் இந்தப் பட்டணத்தையே விலைக்கு வாங்கிவிடுவார்!!அவருடைய பாட்டன், முப்பாட்டன்மார்கள் சேர்த்துக்குவித்த குபேர சம்பத்து இன்னும் அவருடைய பலதலைமுறைகளுக்குப் போதுமானது!!...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]],[[2]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=குபேர_சம்பத்து&oldid=1394510" இலிருந்து மீள்விக்கப்பட்டது